(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும், (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். -
திருக்குர்ஆன்: 2:187
"நீங்கள் அமைதிபெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
-திருக்குர்ஆன் 21:30
*********************************************************************
அண்ணல் நபிகளாரின் அருமை பொன் மொழிகள்
**********
செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா
-----------------------------
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி
-----------------------------------------------
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''வாலிபர்களே உங்களில் யார் (உடல் மற்றும் ஏனைய) சக்தி பெறுவாரோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது (திருமணம்) கற்பைக் காத்துக் கொள்வதற்கும், பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் (போதுமானது).....''
நூல்: புகாரி 5065, முஸ்லிம் 1400
---------------------------------------------------------
சிறந்த பெண்
நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?’
அண்ணலார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்’.
ஆதாரம்: நஸயீ
-------------------------------------
"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"
- நபி (ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
-----------------------------------
"நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புஹாரி எண் 6373
******************************************
உங்களோடு பகிர்வதில் மகிழ்வடைகின்றேன்
உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள் வேண்டி
கடந்த வாழ்க்கை நிறைவாய் இருக்க
நடக்க இருக்கும் வாழ்வும் சிறப்படைய
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
பிறப்பு - திருமணம் - வாழ்க்கை
"1356 துல்காயிதா பிறை 24 காலை மணி 9-1/2 க்கு உம்முசல்மாவுக்கு வியாழக் கிழமை முஹம்மது ஜின்னா பிறந்தது
தை மாதம் 14 வியாழக் கிழமை
1938 ஜனவரி மாதம் 27 தேதியில் வியாழக் கிழமை"
- ஹாஜி,S.E.அப்துல் காதர் சாஹிப்
**************************
இறைவன் திருவருளால் நிகழும் 1380 துல்ஹஜ் பிறை 22-ல்(6-6-1961) செவ்வாயன்று புதனிரவு
ஹாஜி,S.E.அப்துல் காதர் சாஹிப் அவர்களின் புதல்வர்
முஹம்மது அலி அவர்களுக்கும்
ஹாஜி,A.அப்துல் ஹன்னான் அவர்களின் புதல்வி
நஸீம்பானுக்கும்
நிக்காஹ்(திருமணம்)
படத்தில் எனது நெருங்கிய நண்பர் முரசொலி செல்வம் எனது அருகில் அமர்ந்துள்ளார் .அவரும் மாப்பிள்ளை தோழர்களில் ஒருவர்
இறைவன் அருளால் நிறைந்த வாழ்வு
ஏற்றமும் இறக்கமும் இறைவன் தந்ததவையாதளால்
மன நிறைவோடு ஏற்றுக் கொண்டு
மகிழ்வோடு வாழ்ந்த காலங்கள்
இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும்
இனிய நினைவுகளோடு இறைவன் அருளால்
மனம் நிறைந்த மக்களின் துவாவுடன் (ஆசியுடன் ,வேண்டுதலுடன் )
அன்புடன் ,
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
No comments:
Post a Comment