நம்மை நாம் அறிந்துகொண்டோம்!
நம்மை மற்றவர் எவ்விதம் அறிந்து கொண்டார்கள் என்பதில்தான் உயர்வே உள்ளது.
நம் அறிவின் ஆற்றல் உயர்வாக உள்ளதாக நாமே ஒரு எடை போட்டுக்கொண்டு அதனை தவறாக செயல்படுத்தும் போது அனைத்தும் விரயமாகின்றது.
பொது வாழ்வில் வந்த பின்பும் பொதுவாக ஒரு கருத்தை வெளியே கொடுத்த பின்பும் அது உங்கள் உரிமையோடு மட்டும் நிற்பதில்லை . மக்களின் விமர்சனத்திற்கு அது உள்ளாகின்றது
.விமர்சனம் நம்மை மேன்மை படுத்தவும் மற்றும் திருத்திக் கொள்ளவும் உதவுகின்றது. கத்தியை எடுத்து காயை வெட்டுவதுபோல் கருத்தைக் கொண்டு அடுத்தவர் மனதை வெட்ட முயல்வது சிறப்பாக முடியாது.
சமூகத்தில் நாமும் ஒருவன்.நாம் நலமுடன் அமைதியாக வாழ சமூகத்தின் ஒற்றுமையை குலைப்பதில் நாம் ஒருவராகிவிடக் கூடாது . அதற்கு முதலில் நம்மை நாமே நீங்களே அறிந்துக் கொள்ள வேண்டும் .
No comments:
Post a Comment