Wednesday, 3 June 2015

நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும்.

 உங்கள் நம்பிக்கை உங்கள் உயர்வுக்கு வழிகாட்டும்!
 இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் . நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும்.  ஆனால் இறைவன்  தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன்  அவசியம் என்று  நம்பினால்,  இறைவன்  உள்ளதையும்  நம்ப வேண்டும்.
இறைவன் மீது கொண்டுள்ள நம்பிகையும் அவன் மீது வைத்துள்ள பற்றும் உங்களை ஆத்ம திருப்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மனித சட்டத்தின்மீது   மனிதனுக்கு மரியாதையும் பயமும் இல்லை. மனித சட்டத்தினை மனிதன் தான் விரும்பிய போக்கில் தனக்கு தகுந்ததுபோல் மாற்றம் செய்துக் கொண்டு வாழ முற்படும்போது பல குழப்பங்களும் அதிருப்தியும் சச்சரவும் ஏற்படத்தான் செய்கின்றது . மனிதன் கொண்டு வரும் சட்டங்கள் இறை நம்பிக்கையுடன் அதன் அடிப்படையில்  இருக்க வேண்டும். எந்த ஒரு மார்க்கமும் தவறு செய்யத் தூண்டுவதில்லை.
இறைவன் மீது  முழு பக்தி கொண்டு, அன்பு, அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும்.
 “…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)

நிலையற்ற பொருள்களின் மீது பற்று வைக்கக் கூடாது. நீக்கமற நிறைந்துள்ள இறைவன்   மீதுதான் பற்று வைக்க வேண்டும்.

 “எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்”  (65:3)


“நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பியிருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்” என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திரிமிதி)

அனைத்து மார்க்கமும் நல் வழிக்கே  ஊக்கமும் ஆக்கமும் தருகின்றது.அவைகள் நேர்மை, உண்மை, பெருந்தன்மை ஆகிய   நடத்தையின் ஒரு அம்சமாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு பொருளை எடுத்துக்கொண்டு  அது எங்கிருந்து வந்தது என்ற ஆய்வில் ஈடுபடும் பொழுது அதன் ஆரம்பம் இறைவனால் அருளப்பட்டது என்பதனை அறியவரலாம்.

உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து  வந்தது .அரிசி நெல்லிருந்து  வந்தது  ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.

No comments:

Post a Comment