Tuesday, 26 January 2016

தற்கொலையை தற்கொலை செய்

புரட்சியும் ,மறுமலர்ச்சியும் தற்கொலை செய்து கொண்டுதான் வந்ததாக சரித்திரம் இல்லை.
போராடும் குணம் வேண்டும் அதற்காக வாழ வேண்டும்.
நற்காரியங்களுக்காக் போராடும்போது உயிர்போகும் நிலை உருவாக்கப்படலாம் ஆனால் அது தற்கொலையாக இருக்கக் கூடாது.
ஹிட்லரும் தற்கொலை செய்துக் கொண்டான் தன்னிலை தடுமாறிய போது.
சதாம்உசேன் போராடும் குணம் கொண்டான் ஆனால் அவன் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை போர் வெறியர்களால் கொலை செய்யப் பட்டான்.
பெரியோர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் தற்கொலை செய்யும் கொள்ளும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.

விரக்தியின் முடிவு வேதனையாக இருக்கலாம் அது தன்னை அழித்துக் கொள்வதாக இருக்கக் கூடாது அந்நிலை வந்தால் மனோதத்துவரிடம் செல்ல வேண்டிய நிலைதான் சிறந்ததாக இருக்க முடியும்.
தற்கொலையால்தான் ஒரு காரியம் நிறைவேறுமென்றால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்
தற்கொலையால்தான் ஒரு காரியம் நிறைவேறுமென்றால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்
தோல்விக்கு முடிவு தற்கொலைதான் என்பது தவறான முடிவு
 ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வில் தோல்வியை சந்திக்காமல் இருந்திருக்க முடியாது
இஸ்லாம் தற்கொலையை கடுமையாக கண்டிக்கும் விதமாக தற்கொலை செய்பவருக்கு நரகம்தான் முடிவு என்கின்றது
தற்கொலையை தற்கொலை செய்வது அவசியம்

1 comment:

  1. மிக நல்ல..காலத்திற்கேற்ற பதிவு

    ReplyDelete