Tuesday 1 March 2016

நாடுவது கிடைக்கும்.



ஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்.
இதில் உண்மை இருப்பதும் உண்மை.

இதில் உண்மை உண்டு என்று சொல்வோர் பலர். 

'உண்மை கிடையாது' என்று  சொல்லுமளவுக்கு சிலர்

நம்பிக்கை வைப்பதில் பலருக்கு நகைப்பை கொடுத்தாலும்
அந்த சிலர் அதில் முழு நம்பிக்கையோடு நம்புகின்றனர்.


இப்படி பல உண்மைகள் .

நாடுவது கிடைக்கும்.

பகுத்துணர்ந்து செயல்படுதல் நன்மை தரும் .

கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு .

நீருக்கு நிறமில்லை இதுவும் உண்மை .



முதலில் தத்துவம் பின்பு ஆய்வு அடுத்து அதன்மீது முழுமையான நம்பிக்கை.
இது பலரும் நம்புவது.
இதற்கு மாறாக தானும் தவறான பாதையில் தொடர மற்றவரையும் அந்த பாதையில் தொடர முயல்கின்றனர்.

அவைகளில் சில
பூனை குறுக்கே வந்தால் போகிற காரியம் நடக்காது.

கணவனை இழந்தவள்  திருமண தாலி  எடுத்துக் கொடுத்தால் விளங்காது .

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது

எட்டு  அல்லது   பதிமூன்று   எண்களை விரும்புவதில்ல. பல எண்கள்   கூட்டப்பட்டு அந்த எட்டு  அல்லது   பதிமூன்று எண்கள் வந்தாலும் விரும்புவதில்லை.

கார் , பைக் வாங்குபவர்களிடம் இது அதிகம். அம்மாதிரி எண்கள் இருந்துவிட்டால் அதனால் தவறான விளைவுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுவிடும் மற்றும் அதனை  திரும்பவும் விற்பதற்கு கடினம்  என்பது அவர்களுக்கு  ஒரு நம்பிக்கை

மருத்துவகத்திற்கு சென்று தங்கும் நிலை வந்தாலும்  எட்டு  அல்லது   பதிமூன்று எண்கள் அறையில் தங்கி வைத்தியம் பார்க்க விரும்புவதில்லை.

நாட்கள் அதாவது  சில கிழமைகள்  உயர்வானவையாம் மற்றும் சில நாட்கள் கெட்டவையாம். சில கிழமைகளில் நன்மை உண்டாகுமாம் மற்ற சில கிழமைகளில்  தொடங்குவதால்  தீங்கு  விளையுமாம்.


“யாராவது குறி சொல்பனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குர்ஆனை) நிராகரித்தவர் ஆவார்”.

- அறிவித்தவர் : அபூஹுரைரா (ரலி) ஆதார நூல் : அபூதாவுத்

          

மந்திர முடுச்சு போட்டுக் கொடுத்தால் நினைத்தது நடக்கும் அல்லது கெட்டது  விலகும்

இவ்வித நம்பிகைக்யை நம்புவர்களும் உள்ளனர். அதனை மட்றவர்   மூடநம்பிக்கை என்று சொல்வோர் அதிகம்.


ஒரு செயலில்  சில உண்மையான சில தத்துவங்கள் ஒளிந்திருக்கலாம்.ஆனால் அடிப்படையை சிலர் மறந்து  விட்டு காலமெல்லாம் அவர் செய்கின்றார் அதனால்  அவருக்கு நன்மை விளைந்தது அதனால் நாமும் செய்வோம் என்ற அசட்டு நம்பிக்கை.


அம்மை போட்டால் வாசலில் வேப்ப இலைகளை வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர்,
அது இந்த வீட்டில் சிலருக்கு அம்மை போட்டுள்ளது ,அது தொற்றும் நோய் அதனால் இங்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்ற காரணத்திற்க்காக அந்த செயல் முறை வந்திருக்கலாம். வேப்ப மரத்தின் இலைகள்   தோல் நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுத்தப்படுகிறது .அம்மை போட்டவர்களுக்கு உடலில் அரிப்பு உணர்வு உண்டாகும் அப்பொழுது நகம்பட்டு சொரிந்து விட்டால் புண்ணாகிவிடும் அப்பொழுது வேப்ப மரத்தின் இலைகளால் தடவிவிட்டு  அரிப்பின் உணர்வை தனித்துக் கொள்வார்கள்.ஆனால் இப்பொழுது அதனை செய்வோர்  வேப்ப இலைகளை வாசலில் கட்டி தொங்க விட்டாலே அம்மை போய்விடும் என்ற மூடநம்பிக்கையுடையோரும் உண்டு.

 நீங்கள் மூடநம்பிக்கையை  நம்புகிறவ்ரா ?

இது வேற்று இரண்டு நிகழ்வுகள் இடையே எந்த தொடர்புமின்றி   மற்றொரு நிகழ்வு வழிவகுக்கும் என்ற  நிலையில் தள்ளப்பட்டவர்.  இது  மதரீதியாக இருப்பதாக தவறான  நம்பிக்கைக் கொண்டு பின்பு அதற்க்கு மனோரீதியாக அடைக்கலமானவர். இது வழிகாட்டுதலின் தவறாக உள்ளது என்பதைவிட அதனை சரியாக அறிந்துக் கொண்டதின் காரணமாகவும் இருக்கலாம். இவரின் அறியாமை அவர் பின்பற்றி வரும் மார்க்கத்திற்க்கே அவப்பெயர் உண்டாக்க வழிவகுக்கின்றார். இவருக்கு   உண்மையிலேயே அந்த மார்க்கத்தின் மீது பற்றும் அக்கறையும் இல்லை. மாறாக தன்னலமும்,சுயநலமும் மிகைத்து நிற்பதுதான் உண்மை. மார்க்கம் தவறான வழி காட்டவில்லை ஆனால் இவர் புரிந்துக் கொண்டதில்தான் அடிப்படை தவறாக உள்ளது.  


 செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத்(துறத்தல்) எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.நபிமொழி


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை.' - நபிமொழி

முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்


No comments:

Post a Comment