Monday 9 May 2016

போட்டியோ போட்டி !

போட்டி போட்டு முன்னேறு
போட்டி போடவேண்டியதில் போட்டி போடு
போட்டிக்காக போட்டி வேண்டாம்
போட்டி போடுவதில் குறிக்கோள் வேண்டும்
போட்டி போடுவது திறமையை வளர்த்துக் கொள்ள
போட்டி போட்டு பரிசுகளை அள்ளிக் கொள்ள
போட்டி போடுவது பெருமையை நாடி அல்ல
போட்டியில் வெற்றி கொண்டால் கர்வம் கொள்ளாதே
போட்டி போடுவது மற்றவரை வீழ்த்த அல்ல
போட்டி போடுவது நாம் வெற்றி அடைய
போட்டியின் வெற்றி நிலையானதல்ல


போட்டியில் தோற்றால் துவண்டு விடாதே
போட்டியில் வேகமும் விவேகமும் வேண்டும்
போட்டியில் வெற்றி கொள்ள வெறி வேண்டாம்
போட்டியில் அச்சம் அடைய  வேண்டாம்
போட்டியின் அனுபவம்  நம் நிலை அறிய வைக்கும்
போட்டியின் தோல்வி ஆளுமைக்கு வழிகாட்டி
போட்டியின் தோல்வி மனோபலத்தின் எடைக் கல்

பேச்சுப் போட்டியின் முடிவு தர்க்கத்தின் வெற்றி அல்ல
பேச்சுப் போட்டியின் முடிவு விவாதத்தின் விளக்கம்
பேச்சுப் போட்டி வெற்றி கொண்டாட அல்ல
பேச்சுப் போட்டியின் வென்றதால் இறுமாப்பு வேண்டாம்
பேச்சுப் போட்டியில் அனைவர் பங்கும் அதில் அடங்கும்
பேச்சுப் போட்டியில் அனைத்துக் கருத்தும் உடன்பாடாகிவிட முடியாது

அறிவுக்கான போட்டி நம் அறிவை வளர்க்கும்
விளையாட்டுக்கான போட்டி நம் உடல்நலத்தை வளர்க்கும்
மூளை பயிற்சி அறிவை வளர்க்கும்
உடற்பயிற்சி உடல்நலத்தை வளர்க்கும்
பணத்தை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை வீழ்த்தும் குறிக்கோள் வேண்டாம்
நன்மை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை சேர்த்துக் கொள்
இறைவணக்கத்தில் போட்டி இல்லை இறைவணக்கத்தில்  ஈடுபாடு வேண்டும்

No comments:

Post a Comment