Friday 17 June 2016

இறைவா துன்பம் வரும்போது துயர் கொள்ளாத உள்ளத்தை தா !.



  என் முடி இப்போது வெள்ளையாகி  விட்டது , இளமையில் இருந்த  மகிழ்ச்சி இப்பொழுது எங்கே காணாமல் போய்விட்டது.வயது வளர முடியின் நிறம் மாறுவது இயற்கை. மனதில் மாறுபடும் மகிழ்வும் குறைந்து வருவது இயற்கையாகிவிடுமோ! வயதானால் உள்ளம் பண்பட்டு துயரம் தொலைவதற்கு என்னதான் வழி!

அதற்கும் ஒரு வழியை இறைவன் காட்டாமலா இருப்பான்!

ஆசை,அளவிற்கு மீறிய விருப்பம், நினைத்தது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி ,கிடைத்ததை இழக்கும் போது அனுபவிக்கும் துயரம் அத்தனையும் வாழ்வோடு ஒன்றியதுதான். அனைத்தையும் சமநிலையாக எடுத்துக்கொள்ளும்   பக்குவம் எப்போழுதுதான் வரும்?


   சந்தோஷமாக இருக்க தொடர்ச்சியான மகிழ்ச்சியை தரும் பொருள் இந்த உலகத்தில் எதுவும் இல்லை. காதலித்து, மனமொன்றி மற்றும் ஆசையோடு நேசித்த அழகிய பெண்ணைத்தான் திருமணம் செய்துக் கொண்டோம். காலம் மாறியது சூழ்நிலை  மாறியது, மனநிலையும் மாறியது மனமுடித்த மனவியின் மீது வைத்திருந்த அன்பும் ,பாசமும்,நேசமும், காதலும் குறைந்து காணாமல் போகிவிடும் நிலை. அன்போடு வளர்த்த பிள்ளைகளும் நம்மை விட்டு போய் விடுவார்களோ என்ற அச்சமும்,அவர்கள் நம்மை மதிக்க வில்லையே என்ற ஏக்கமும் வந்துவிட்டது.இந்த வாழ்வே சோகமாக மாறும் நிலை வந்து வாழ்வதின் மேல் உள்ள விருப்பம் குறைய ஆரம்பித்து விட்டது .
   இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இந்த உலகில் கிடைப்பதெல்லாம் நமக்கு உடைமையாகி நம்மோடு ஒட்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கை. இந்த உலகில் வாழ்வது வழிப்போக்கனது வாழ்வு என்பதனை  நம்பாமல் போனது. நமக்கு உறுதியான, நிலையான  உயர்ந்த வாழ்வு ஒன்று உண்டு அதற்கு
 ஆவனவற்றை, தேவையானதை   இங்குதான் தயார் செய்துக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கை அற்றுப்போனது. மகிழ்வை சந்தையில் வாங்க முடியாது. அதற்கு சில அர்பணிப்புகள் தேவைப்படுகின்றது. அதுதான் மார்க்கம் காட்டிய வழி. அந்த வழியை சரியாக பயன்படுத்தி வாழும் முறையில் கடைப்பிடித்து வந்தால். துயரம் நம்மை விட்டு ஓடிவிடும்.மகிழ்வே இருந்து நம்மை நடத்திச் செல்லும் . அதற்கு இறைவன் காட்டிய வழியே சிறந்த வழி. அதில் துன்பம் வந்தாலும் மனம் துவளாது  தாங்கிக் கொள்ளும், மகிழ்வு வந்தாலும் மனம் துள்ளிக் குதிக்காது .சமநிலை தந்து வாழ்கையை உயர்வாக்கி நெடு நாள் வாழ விருப்பமடைந்து இறைவனை தொழுது மக்களுக்கு தொண்டு செய்து மறுலோக நிலையான உயர்ந்த வாழ்விற்கு அடிப்படையாக்கிவிடும். இதுதானே இஸ்லாமும் சொல்கின்றது .


 இஸ்லாம் என்றாலே அமைதியான வாழும் வாழ்க்கைக்கு வழிகாட்டிதானே!  (ISLAM is derived from the word 'Aslam' and the Arabic root "SALEMA" that means peace, purity, submission and obedience. )அமைதி ,தூய்மை, இறைவனுக்கு கீழ்படிதல் இதன் அடிப்படையில் நாம் வாழ்வது உயர்வு .இது சிறப்பான வாழ்வைத் தந்து அமைதியான வாழ்வைத் தரும்

''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரளி)  நூல்கள்: புகாரி , முஸ்லிம்

இறைவா துன்பம் வரும்போது துயர் கொள்ளாத உள்ளத்தை தா !.
----------------
இறைவா நீ தானே சொன்னாய் ..
94:5 فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6 إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
-------------------------------------------
இரவுக்குப் பின் பகல் வரும்
இறைவா நீ இருக்க எனக்கு என்ன அச்சம் ,
நீ அருகிலிருக்க யார் எனக்கு விரோதி ! யார் என்னை துன்புறுத்த முடியும் .

No comments:

Post a Comment