கடுமை சொல் சொன்னாலும்
கருணை சொல் சொல்வார்
முகமதைக் கண்டோர் முகம் மலர்வர்
அகமது குளிர மனம் மகிழ்வர்
துன்பப் பட வைத்தோர்க்கும்
நன்மை பட செய்வார் நபி
காய்வழி வந்து கனியாகி சிறப்படைய
சேய்வழி நகர்ந்து பணிவாகி பெரியோர் போற்ற
அறவழி அறிந்து பிறவழி நாடுவார்
மறைவழி அறிந்து நபி வழி பேணுவதன்றோ சிறப்பு
கடுஞ்சொல் சொல்வோர் நல்வழி வர நாளாகுமோ !
பெருஞ்செயல் செய்வோர் அறவழி வழி செய்யச் செய்வது சிறப்பாகுமே
அயலானை அரவணைத்து செயல்பட்டால்
கயவோனும் மறையறிந்து தூய்மையடைவான்
விவேகமில்லா வீரம் விரயமாகும்
பணிவில்லா பாசம் குறையாகும்
அறிவில்லா ஆற்றல் நாசமாகும்
நமக்கோர் பக்குவம் வந்திட
நாமெல்லாம் ஒட்றுமை அடைந்திட
எடுத்தோம் தொடுத்தோம் என்றில்லாமல்
நல்லதோர் திட்டம் தீட்ட
செம்மையாய் செய்து முடிக்க
செழுமையாய் சேவை செய்து
பசுமையாய் மனதில் நிறுத்திட
இறை வணக்கம் இயல்பாய் இருந்திட
இறைக் கருணையும் இருத்தல் வேண்டும்
நமக்கும் நற்பண்புகள் வந்திடும்
நமக்கும் நற்பயன்கள் கிடைத்திடும்
கயவோனை காய்ச்சியெடுத்தால் மாண்டு போவான்
மாக்கள் மக்களாக மாற வேண்டும்
மக்களின்றி நாமிருந்து என்ன பயன்
கற்றதும் பெற்றதும் காயப்படுத்துவதற்கா
கற்றவை நான் நலம்பட வாழ மற்றும் மற்றவர் வாழ
மற்றவர்க்கு போதிக்க வந்த அமானுதமே(அடமானமே) உம் கல்வி
No comments:
Post a Comment