Wednesday, 25 October 2017

நீ அழகு உன்னை நினைத்தாலே அழகு

நீ அழகு உன்னை நினைத்தாலே அழகு (அழகு (Beauty) என்பது ஒர் எண்ணம்)
சிரித்தாலும் அழகு, அன்பாய் முறைத்தாலும் அழகு. அடம்பிடித்து அழுதாலும் அழகு, செயலிலும் அழகு
அழகிலும் அழகு
கொல்லாமை அழகு.குறை சொல்லாமல் இருத்தல் அழகு
அழகு இனிமையானது
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
படைத்தவனுக்கு அனைத்தும் அழகு
பார்ப்பவன் பார்வையில் அழகினில் மாற்றம்
நிறமெல்லாம் அழகு

ஓர் உருவத்தில் எத்தனை நிறங்கள் இருப்பிடமானது
கண்களில் வெள்ளையும் கருப்பும் அடக்கம்
முடிகள் கருப்பு பாதங்கள் வெள்ளை
அவனது படைப்பினை அறிந்து மகிழ்வதும்
அவனை தொழுது நிற்பதும் அழகிலும் அழகு
அழகு என்பது ஒரு கடல் .அது ஒரு கற்பனை உலகம் .அழகை கண்டு ரசி ஆனால் அடைய முயலாதே என்பர். ரசித்த அழகை எல்லாம் அடைந்து விட முடியுமா! நிலாவினை ரசித்த நம்மால் ஒரு சிலரால் மட்டும் தொட முடிந்தது ஆனால் எல்லோரும் அதனை ரசிக்க முடியும் .
அழகினை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அடைய முயல்வதிலும் ஒரு எல்லை உண்டு .அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை ஆனால் கவர்சியாக காணப்பட வேண்டும் என்பது முறையல்ல.
சில நேரங்களில், சிலவற்றில் அழகினை பங்கு போட்டுக்கொள்ள முடியாது .அதற்கும் உரிமை உடையோர் உண்டு .மனைவியின் அழகு கணவனுக்கு உரிமை .மனைவி என்பவள் மற்றவருக்காக தன்னை அழகுபடுத்திக் கொண்டால் மட்டும் எப்படி சிறப்பாக முடியும்.
அழகு மனதினை சார்ந்தது .இன்று இருக்கும். அழகு நாளை நமக்கு அது இல்லாமல் போகலாம் . ஒரு பொருளை இன்று அழகாக இருப்பதாக எண்ணி அதனை வாங்குகின்றோம் நாளை மற்றொரு பொருள் நமக்கு அழகாக தோன்றும் .காலத்திற்கு காலம் மாறுபடக்கூடியது . அழகு என்பது நிலையானது அல்ல .அது மனதினைப் பற்றியது. உள்ளத்தின் அழகே அழகு.
அதனால் அதற்கு எல்லையும், விலையும் உண்டு.
எனக்கு நானே அழகு
என்னவள் என்னைவிட அழகு
என்னிதயத்தில் அவள் குடிகொண்டமையால்
அடுத்தவர் அழகை கண்டு ரசிப்பதிலும் அழகு
அடுத்தவர் அழகை அடைய முயலாதிருக்கும் வரை அதுவே அழகு

No comments:

Post a Comment