Monday 15 January 2018

இக்கரைக்கு அக்கரை பச்சை

அக்கரை வாழ்கையில் நடந்ததை வெளியில் சொல்லமுடியாது
இக்கரையில் வீட்டிற்குள் நடந்தவைகள் வெளியில் சொல்லமுடியாது
அக்கரைபோகும்போதேல்லாம் பெற்ற மக்களை விட்டுப் பிரிய மனம் அழுகும்
அக்கறையோடு அனைத்தையும் அடக்கிக் கொண்டு அக்கரை போக வேண்டும்

அக்கறையோடு பேசுவாள் நான் அக்கரையிலிருக்க
இக்கரை வந்தால் பேச்சும் அக்கறையாக அமையும்
இக்கரையில் வைகறை நாட்கள் பல ஓட
'அக்கரைக்கு எப்போது' யென்பாள் நக்கலாக



இக்கரைவந்தால் அக்கரை எப்பொழுது போவாய் என அக்கறையோடு கேட்க
அக்கரையிலலிருந்து அக்கறையோடு அனைத்தும் கொண்டு வந்திருப்பேன் என பெட்டி திறக்க
அக்கறையிருந்தால்தானே கொண்டு வருவீர்கள் யெனச் சொல்ல
கறைபிடித்த மனம் கொண்டோரை கண்டு கொண்டேன்

அக்கரைமீது அக்கறை வர
இக்கரை விட்டு அக்கரை போக
அக்கறை இல்லை அக்கரையில்
இக்கரைக்கு அக்கரை பச்சை

அக்கறையோ இக்கரையோ
எக்கரையும் ஒன்றுபோல் ஒன்றிருப்பதில்லை
ஒன்றை விட ஒன்று பயன் நாடி வரும்

Mohamed Ali

No comments:

Post a Comment