இயற்கையோடு வாழ் என்பான்
செயற்கையில் நேசம் கொள்வான்
இயல்பாக வாழ் என்பான்
செயற்கையாக செயல் படுவான்
இயற்கை உரம் வேண்டும் என்பான்...
செயற்கை உரம் போட்டு விளைவிப்பான்
நஞ்சுப் புகை விட்டு மகிழ்வான்
நெஞ்சில் நஞ்சை சுமந்துச் செல்வான்
உண்மையச் செய் என்பான்
உண்மையை மாற்ற நிறம் கொடுப்பான்
இறைவன் இல்லை என்பான்
இறுதியில் இறைவனைத் நாடி நிற்பான்
என்நெஞ்சே என்னிறைவன் என்பான்
அவனின்றி ஓர் அணுவும் அசையாதென்பான்
எத்தனை கோலங்கள் படைத்தாய் இறைவா
இத்தனை மனிதருக்குள் !
No comments:
Post a Comment