Wednesday 28 November 2018

தவறு செய்த மகன் மனம் மாறி திரும்ப மகிழ்வுதான்

தவறு செய்த மகன் மனம் மாறி திரும்ப மகிழ்வுதான்

The Parable of the Prodigal Son(a person who spends money in a recklessly extravagant way.)

இளைய மகன் தன் தந்தையிடமிருந்து தனக்கு தர வேண்டிய சொத்துக்களை பிரித்து வாங்கிக் கொண்டு தந்தை மற்றும் மூத்த சகோதரனை விட்டு பிரிந்து சென்று விடுகின்றார்

தவறான முறையில் வாழ்ந்ததால் சென்ற இடத்தில இருந்த அனைத்து சொத்துகளையும் விற்று வேலை செய்யும் நிலைக்கு ஆகி மிகவும் சிரமத்திர்க்குள்ளாகி தன் தவறை உணர்ந்து .அவர் மனம் மாறி திரும்பவும் தன தந்தையை நாடி வருகின்றார்


மகன் திரும்பி வருவதில் மகிழ்ந்து அவருக்காக ஒரு பெரிய விருந்து வைக்கின்றார் தந்தை
வெளியில் சென்றிருந்த ,தன்னுடனேயே இருந்த மூத்த மகனுக்கு மிகவும் வருத்தம் வர தனது தந்தையிடம் சொல்கின்றார்
'உங்களுடன் ஓயாது உழைத்து பிரியாது பாசத்துடன் இருந்த எனக்கு ஒரு தடவை கூட இவ்விதம் விருந்து தந்ததில்லையே' என்று

அதற்கு 'அவர் தந்தை சொல்கிறார்
'நீ என்னுடம் இருந்து மனம் மாறாத அன்பை பெற்றவன்.மகிழ்வையும் தந்துக் கொண்டிருந்தவன் நீ உனது சகோதரன் என்னை விட்டு போனவன் இறந்தவன் திரும்பி வருவது போல் வருகின்றான் அதனை நினைத்து அவனுக்கு மகிழ்வு தர வேண்டியது அவசியமாகின்றது' என்கின்றார்,அதனைக் கேட்டு மூத்த மகனும் அமைதி அடைகின்றார்

கெட்டுப் போன ,காணாமல் மகன் திருந்தி திரும்பி வரும்போது தந்தைக்கு மகிழ்வுதான்

No comments:

Post a Comment