Tuesday 20 November 2018

Sabarimala travel சபரிமலை பிரயாணம்

எனது மலையாள நண்பர் Das Yatheendra தாஸ் சபரிமலை சென்றார் .Sabarimala travel அப்பொழுது நான் திருச்சூர் *கேரளாவில் )அவருடன் இருந்தேன் .அவர் என்னையும் உடன் வர அழைத்தார் .அது சபரிமலை சீசன் அல்ல . உடன் இருந்த நண்பர்கள் இக்காலத்தில் போவது அபாயகரமானது எனறு சொல்லி போகவேண்டாமென தடுத்தனர் .அவரது வற்புறுத்தலின் காரணமாக நண்பரோடு சென்றேன் .அன்று வெள்ளிக்கிழமை போகும் வழியில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டேன்
இதோ வந்து விட்டது எனறு சொல்லிக்கொண்டே இருந்தார் .காரில்தான் சென்றோம்
அந்த இடம் நெருங்கும்போது இரவு வந்துவிட்டது .போகுமிடமெல்லாம் அடர்ந்த உயரமான புற்கள்
ஒருவகையான பயத்துடன் மலையேறி அவருடன் சென்றேன் .எத்தனையோ மலைகள் ஏறி இருக்கின்றேன் அந்த பயம் இதுவரை எனக்கு வந்ததில்லை

மலையேறி அந்த இடம் வந்தபோது முதலில் குளித்து விட்டு இஸா மற்ற தொழுகையில் ஈடுபட்டேன் .அன்று நான் என்னை மறந்து தொழுதேன் .அது நிறைவானதாகவும் இறைவனை ஒன்றியதாகவும் இருந்தது . தொழுதபின் பசி அதிகமானது உண்ண ஒன்றுமில்லை .அங்கு மின்சார வேலை பார்ப்பவர் ;
கஞ்சி வெள்ளம் ;செய்துக் கொடுத்தார் . அது அமிர்தம் போன்று ருசியைக் கொடுத்தது
நண்பரிடம் கேட்டேன்:"நீ என்ன இங்கு வேண்டினாய்" எனறு
அவர் "நான் ஒன்றும் வேண்டவில்லை உன்னை பத்திரமாக் ஊருக்கு அனுப்பிக்க வேண்டுமென்றே வேண்டினேன்" என்றார்
அதே நேரத்தில் இரண்டு வெளிநாட்டு ஆங்கிலேயர்கள் மலையின் குறுக்கு வழியில் மலை ஏறி வந்திருந்தனர் .அது எனக்கு அதிசமாக இருந்தது

இரவு தூங்கி எழுந்து பார்க்க மேகங்கள் எங்களை தவழ்ந்து சென்றன மெய்சிலிர்க்க வைத்தன
திரும்ப வரும்போது படப்பை ஆற்றில் குளித்து மகிழ்ந்தேன் .மிகவும் தெளிவான நீரோட்டம் .அடியில் கிடக்கும் கூழாங் கற்கள் தெளிவாக் காட்சி தந்தன .மணல் கிடையாது
இறைவன் எங்கும் நிறைந்தவன் .அவன் இருக்குமிடம் மனதைப் பொறுத்ததுதான்


No comments:

Post a Comment