Monday 31 December 2018

வாழ்த்துங்கள்.

வாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.
வாழ்த்துகள மகிழ்வை தருகின்றது
வாழ்த்துகள வயதை உயர்த்துகின்றது
வாழ்த்துகள பண்பட வைக்கின்றது
வாழ்த்துகள் மனித நேயத்தை தருகின்றது
வாழ்த்துகள் உந்து சக்தியை தருகின்றது
வாழ்த்துகள் வரவேற்பை தருகின்றது
இறைவனை வாழ்த்திதான் வேண்டுகின்றோம்
இல்லங்களில் வாழ்த்திதான் வரவேற்கின்றோம்
இயலாதவனயும் வாழ்த்தும்போது வாழ்கையை விரும்புகின்றான்

வாழ்த்துவதில் நாளென்ன! கிழமையன்ன!
வாழ்த்துவதில் ஜாதியென்ன! மதமென்ன!
வாழ்த்துபவர் மனிதஇனம் தானே.
வாழ வழியை காட்டியதுதானே மார்க்கங்கள்
வாழ்த்துவதற்கு வாழத்தானே வேண்டும்
வாழ்பவனை வீழ்த்த விரும்புபவன் வாழ்த்த முடியுமா!
வாழ்த்துவதை வாழ்நாள் வரை தொடரவேண்டும்
வாழ்த்தும் மனிதரும்
வாழ்த்தை வரவேற்கும் மனிதரும்
வையகத்தில் வாழும்வரை
வையகத்தில் வாழும் மனிதரை வீழ்த்த மனம் வருமோ !
வாழ்வெல்லாம் வாழ்த்தி வாழ்வோம்
வாழ்த்துவது உயர்வே
மக்கள் மனதை மகிழ்விப்பதில் மகிழ்வடைய வேண்டும்
வாழ்த்துகளை வாரி வழங்குவோம்
வாழ்த்துகள் சொல்வது விளையாட்டாக இருக்கலாம்
ஏதிர்பாராத வாழ்த்துக்கள் கிடைத்தவர்
விரும்பியே வாழ்த்துகளை பதிலாக சொல்லிவிடுவார்
ஆயிரம் சொற்களை ஆயிரம் பேர்களிடம் சொன்னாலும்
ஆயிரத்தில் ஒருவர் மனதிலாவது அது உறைந்து நிற்கும்
ஆயிரம் பேர்கள் சொன்ன வாழ்த்துகளில்
ஆயிரத்தில் ஒருவர் சொன்ன வாழ்த்தாவது நம்மை உயர்த்தி நிறுத்தும்
இறைவனால் உய்ரவாக்கப் பட்டவர் அவராக இருக்கலாம்
நாம் சொல்வது சாதாரணம்
நமக்கு கிடைப்பதோ உயர்வானது
வாரி வழங்குங்கள் வாழ்த்துகளை
வாழ்த்துகள் சொல்வதற்கு காலமும் நேரமுமில்லை
எக்காலமும் எந்நேரமும் வாழ்த்துகளுக்கு பொருந்திய நேரங்கள் தான்
சிக்கனம் வேண்டாம் வாழ்த்துகள் சொல்வதில்

No comments:

Post a Comment