Friday 22 November 2019

வாழ்வில் மறக்க முடியாத ஹாஜி அன்பு இ.ப.அவர்கள்


வாழ்வில் மறக்க முடியாத அன்பு மாமா இ.ப.
இந்த பெரியவர் .இ.ப. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பக்கீர் முஹம்மது ராவுத்தர் அவர்கள் எனது தந்தையின் உயிர் தோழராக வாழ்ந்தவர்.
இவரை அன்புடன் மாமா என்றுதான் அழைப்பேன்
எங்கள் வாழ்வில் இவர் ஒரு அங்கம்
இவர்தான் எங்கள் வெங்கலக் கடையை நடத்தி வந்தவர் .கடையின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கு மிகவும் அதிகம் .அவர்களது வீட்டுக்கே வெங்கலக் கடைக்காரர் வீடு என்று ஊர் மக்கள் அழைப்பர்
எங்கள் தந்தையோடு அனைத்து நாடுகளுக்கும் உடன் சென்றவர்
நான் சிறு வயதில் அவர்களிடன்தான் தினமும் கடையில் பள்ளிக்கூடம் சென்று வந்த பின் அரை அணா காசு பெற்றுக் கொள்வேன்
சிரித்த முகம் .கோபமே வராது . .


படத்துடன் உடன் இருப்பவர் எனது அண்ணன் ஹக்கீம் அவர்கள்

No comments:

Post a Comment