Showing posts with label சொல். Show all posts
Showing posts with label சொல். Show all posts

Wednesday, 17 September 2014

சொல்ல வேண்டியதைச் சொல்



சொல்ல வேண்டியதைச் சொல்
சொல்லக் கூடாததை சொல்லாதே
சொல்ல வேண்டியதை
சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்
சொல்லக் கூடாததை
சொல்ல கூடாத தருணத்தில் சொல்லி விடாதே

செய்ய வேண்டியதைச் செய்
செய்யக் கூடாததை செய்யாதே
பதுமையாக படைக்கப் படவில்லை
வாய் உண்பதற்கு மட்டுமல்ல
வாய் பேசுவதற்கும் தான் தரப்பட்டுள்ளது
வாய் பேச
உதடுகள் அசைய
நாக்கு பிரள
இத்தனையும் ஒன்று சேர
அறிவும் அங்கு பயன் படுத்தப் பட வேண்டும்
இறைவன் நம்மை படைத்ததற்கே காரணம் உண்டு
காரணத்தை கண்டு அறிந்து
ஒவ்வொன்றும்
உபயோகப் பட வேண்டும்
அறிவைத் தேடு
ஆய்வை நாடு
அதன் சிறப்பை
மற்றவருக்கும் கொடு
இறைவனின் ஆற்றலை அறிந்திடு
இறைவனுக்கு நன்றி செலுத்து
இறைவனைத் தொழுது
சிறப்பை இரு லோகத்திலும்
பெற்றிட வாழ்வை உயர்வாக்கிக் கொள்
Mohamed Ali

Thursday, 17 October 2013

சொல்ல விரும்புவது


சொல்ல விரும்புவது உண்மை
சொல்ல மறந்தது செயல்

சொல்லாமல் செய்தது தர்மம்
சொல்லியும் செய்யாதது வீம்பு

பார்த்து ரசித்தது இயற்கை
பார்க்காமல் ரசித்தது கனவு

கேட்டு ரசித்தது இசை
கேட்டு ரசிக்காதது அழுகை

நடக்கும் என்று நம்புவது நம்பிக்கை
நடக்காது என்று நம்புவது அவநம்பிக்கை

Thursday, 22 August 2013

சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்

சொல்லுக்கு சில பொருள்கள்
சொல்லாமைக்கு மௌனம்
சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்
சொல்லக் கூடாததை சொல்லாமல் தவிர்க்க வேண்டும்

மௌனத்திற்கு பல பொருள்கள்
மௌனம் வர வேதாந்தியாகலாம்
மௌனம் வர தனிமைப் படுத்தப் படலாம்
மௌனம் தன்னையறிதலின் வழியாக அமையலாம்
மௌனம் சம்மதத்தின் ஒப்புதலாகலாம்
மௌனம் வேண்டாமையின் தோற்றமாகலாம்
மௌனம் தேவைக்கு தகுந்த நன்மையும் பயக்கும்
மௌனம் வர நண்பனை இழக்கும் நிலையாகலாம்

பாவமான நிகழ்வு
பாசமான நண்பனை
பரிதவிக்க வைத்த
பிரியமான நண்பனின் செயல்பாடு
பிரியமான நண்பனிடம் பிரியத்தை வெளிப்படுத்தாதின் விளைவு

Wednesday, 24 April 2013

அதனை படித்த பாவத்திற்கு என்னையறியாமலேயே நானும் உள்ளாக்கப் பட்டு விட்டேன்.





உயரிய சொல் உயர்த்திவிடும்
தகாத சொல் தாழ்த்திவிடும்
கிண்டலாக சொன்னால் கீழ்மைப் படுவாய்
கேட்பதும் சொல்வதும் உயர்வாக இருக்கட்டும்

அன்பாகச் சொல்
பணிவாகச் சொல்
பரிவாகச் சொல்
பாசத்தோடுச் சொல்

உண்மையைச் சொல்
உயர்த்திச் சொல்
உயர்ந்ததை சொல்
உயர்வடையச் சொல்

சொல்வது பட்டுபோல் இருக்க வேண்டும்
சொல்வது நெஞ்சத்தை வருடி விட வேண்டும்
சொல்வது அழும் குழந்தையை அரவணைப்பது போலிருக்க வேண்டும்
சொல்வது குறையை சுட்டிக் காட்டி சுருளச் செய்யாமல் சிந்திக்க வைக்க வேண்டும்

பெண்களைப் பற்றியோ அல்லது ஒரு மார்க்கத்தைப் பற்றியோ சிலர் எழுதும் வரிகள் மனதை பாதிக்கிறது .படிக்க மனம் வருந்துகின்றது . அது மனித சமுதாயத்திற்கு களங்கம் தருகிறது .ஒற்றுமையை உடைக்கிறது . தவறான கருத்துரையும் தராதீர்கள் தவறான வரிகளை தயவு செய்து போடாதீர்கள் ..இம்மாதிரி வரிகளை உடன் நீக்குவது நன்மை . உங்களால்தான் இதனை நான் படிக்க நேர்ந்தது .அதனை படித்த பாவத்திற்கு என்னையறியாமலேயே நானும் உள்ளாக்கப் பட்டு விட்டேன். தவறு செய்பவர்களை திருத்துங்கள்.கடினமாக திருத்த முற்பட்டால் அறிவு பூர்வமாக செயல்படுங்கள் .முள்ளை முள்ளால்தான் களையெடுக்க வேண்டும். அது முள்ளில் மாட்டிய துணியை எடுப்பதுபோல் இருக்க வேண்டும்