Thursday 17 October 2013

சொல்ல விரும்புவது


சொல்ல விரும்புவது உண்மை
சொல்ல மறந்தது செயல்

சொல்லாமல் செய்தது தர்மம்
சொல்லியும் செய்யாதது வீம்பு

பார்த்து ரசித்தது இயற்கை
பார்க்காமல் ரசித்தது கனவு

கேட்டு ரசித்தது இசை
கேட்டு ரசிக்காதது அழுகை

நடக்கும் என்று நம்புவது நம்பிக்கை
நடக்காது என்று நம்புவது அவநம்பிக்கை

ஓத விரும்புவது வேதத்தை
ஓதி மறப்பது பாடத்தை

விரும்பிக் கொடுப்பது முத்தம்
விரும்பிப் பார்ப்பது முகநூல்

விரும்பிச் சேர்ப்பது நண்பர்கள்
விரும்பாமல் போனது நண்பர்கள்

சேர்க்க நினைப்பது அறிவு
சேர்த்துப் போனது பணம்

சொல்ல விரும்புவது உயர்ந்தவை
சொல்லாமல் விட்டது தாழ்ந்தவை

உயர்ந்த கருத்துக்களை சொல்வார்கள் மற்றும் எழுதுவார்கள் ஆனால் சொன்னபடி எழுதியபடி வாழ்வதில்லை ,காரணம் அவன் மனிதன்.

2 comments:

  1. இப்படி முடித்து விட்டீர்களே... ம்... உண்மை தான் இன்றைக்கு...!

    ReplyDelete
  2. தெரியாதவை இல்லை...! இல்லாதவை இல்லை...! ஒரு அலசல் :
    http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html

    ReplyDelete