தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது
மேலாளர் திட்டியதால் வீட்டில் கோபம்
வீட்டில் கோபம் வந்ததால் இரவில்
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது
தூக்கம் இல்லையென்பது வியாதியல்ல
தூக்கம் இல்லையென்று கவலையடைவதே வியாதியானது

