Tuesday, 19 August 2014

தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்



தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது 
 
மேலாளர் திட்டியதால் வீட்டில் கோபம்
வீட்டில் கோபம் வந்ததால் இரவில்
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது

தூக்கம் இல்லையென்பது வியாதியல்ல
தூக்கம் இல்லையென்று கவலையடைவதே வியாதியானது
  

மணல் ஏற்றி செல்லும் லாரியில் மணல் மீது போர்த்தப் பட்டிருக்கும் துணி மீது சிலர் நிம்மதியாக தூங்குவதனை நாம் பார்த்திருக்கலாம். அவர் வேலை செய்த களைப்பினால் அயர்ந்து தூங்குகின்றார். நாம் ஒரு உடல் உழைப்புமில்லாமல் தூக்கம்  வராமல் தூக்க மருந்து வாங்கி விழுங்குகின்றோம். பின்பு அதற்கு அடிமையாகி விடுகின்றோம். தூக்கம் வராமல் வருந்துவது மிகவும் பாதிக்கும். ஒரு மனிதனால் தொடர்ந்து தூங்காமல் இருக்க முடியாது. அவன் இடை இடையே பூனைத் தூங்குவது போல் தூங்கி இருப்பது அவர் அறிந்திருக்கமாட்டார். மரணத்தை விட மரண பயம் மிகவும் கொடியது.
இறை நம்பிக்கையும் ஆத்ம திருப்தியும் ,உடல் உழைப்பும் அவசியம் தேவை . உள்ளம் கெட்டால் அனைத்தும் கெடும்

No comments:

Post a Comment