நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும் பாராட்ட வேண்டும். பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும் அது சிறிது நேரம் அதிகமானால் கேட்க வந்தவர்கள் அந்த இடத்திலேயே தூங்கிவிட வேண்டும் அல்லது அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது இடைவேளை கிடைத்து விட்டதாக முடிவு செய்து வெளியில் சென்று தேவையானதை முடித்து விட்டு வரவேண்டும்.
Showing posts with label பாராட்டு. Show all posts

Friday, 28 March 2014
Wednesday, 17 April 2013
யாருக்கும் தங்கமான மனிதர் என்ற பாராட்டு கொடுக்காதீர்கள் !
தங்கமான மனிதர் என்று நல்ல மனம் கொண்ட மனிதரைப் பார்த்து சொல்வார்கள்.
அவர் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் என்றால் குற்றம் காண முடியாத ஒழுக்கமுடையவர்,பண்பானவர் என்ற பொருள்பட ஒருவரை உயர்வாக மதிப்பிட்டுச் சொல்வார்கள்.
தங்கத்திற்கு அவ்வளவு மதிப்புண்டு .அதன் மதிப்பு உயர்ந்துக் கொண்டே செல்லும்.
தங்கத்தின் மதிப்பு தடுமாறுகின்றது . அதன் விலையும் வேகமாக குறைகின்றது .
தங்கம் சேர்த்து வைத்தால் தேவைக்கு விற்க முடியும் அதுவும் வாங்கியதைக் காட்டிலும் விற்கும் போது கூடுதலான தொகை கிடைக்கும் என்பதால் பலர் பணம் இருக்கும் போது தங்கம் வாங்கி சேர்த்து வைப்பது தொன்று தொட்டு தொடர்ந்து வரும் செயல்.
தங்கமான மனிதர், பத்தரை மாற்றுத் தங்கம் போன்று குறைகளற்ற மனிதர் என்று சொல்லி ஒருவரை உயர்வாக சொல்லும் காலம் போய் விட்டது போல் தங்கத்தின் நிலையும் வந்து விட்டது. உயர்வான தங்கம் என்று சொல்லி மிகப் பெரிய விளம்பரம் செய்யப்பட்டு விற்கப்படும் தங்கமும் குறை உள்ளதாக இருக்கின்றது. தங்கமான மனிதர் தரம் கெட்டவராக மாறுவதுபோல் உயர்வாக நினைத்து வாங்கிய தங்கம் தரம் கெட்டதாக இருக்கும் 22 கேரட் தங்க நகை இருபது கேரட் நிலையில் நாம் அந்த தங்கத்தை விற்கும்போது அதனை வாங்குவோர் மதிப்பிடும் போது நம் மனம் உடைத்து விடுகின்றது . தங்கத்தை விற்கப் போனால் பணம் தரமுடியாது, அதற்கு பதிலாக புதிய நகை வாங்குங்கள் என்றும் சொல்வார்கள். பண்ட மாற்று செய்யும்போது, பழைய நகையின் எடையில் 10% முதல் 25% வரை குறைப்பார்கள் தங்க நகைகள் வைத்துள்ள இடத்திற்கும் எந்த விதமான பாது காப்பும் இல்லை என்பதுதான் உண்மை. அரசும் தங்கத்தினை அடகு வைக்கும் போதும் பணம் கொடுப்பதனை குறைவாகவே கொடுக்கின்றது.

Subscribe to:
Posts (Atom)