Friday 28 March 2014

பாராட்டாதவன் பாராட்டப்பட தகுதி இல்லாமல் போய் விடுவான்

நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும் பாராட்ட வேண்டும். பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும் அது சிறிது நேரம் அதிகமானால் கேட்க வந்தவர்கள் அந்த இடத்திலேயே தூங்கிவிட வேண்டும் அல்லது அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது இடைவேளை கிடைத்து விட்டதாக முடிவு செய்து வெளியில் சென்று தேவையானதை முடித்து விட்டு வரவேண்டும்.

உயிரோடு உள்ளவர்களைப் பாராட்டுவதால் உனக்கு ஒரு ஆதாயம் கிடைக்கும் . பாராட்டப்பட வேண்டியவர்க்கு அதற்கு தகுதியானவரா என்ற சிந்தனை தேவையில்லை. புகழ்ச்சிக்கு அடிமையாகதவன் யார்! ஒருவனுக்கு மிகவும் பிடித்தது அவன் பெயர் அல்லது மரியாதையுடன் அவரை அழைக்கும் பெயர். இறந்தவர்களை பாராட்டுவதால் அவர் எவ்வளவு சேவை செய்திருந்தாலும் பயன் கிடைக்காது. கிடைக்கலாம் அவரின் குடும்பத்தினைச் சார்ந்த அல்லது அவர் விரும்பியவர் அந்த மேடையில் இருந்தால்!

நம்மிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லையெனில் நம் மூதாதையர் அருமைகளைப் பற்றி பேசித்தானே காலத்தை ஓட்ட வேண்டும்.ஒருவரை பாராட்டுவதுபோல் சிலேடையாக் விமர்சனம் செய்பவர்களும் உண்டு.
நன்றி காட்டுவதற்காக பாராட்டி மகிழ்வது இயல்புதான் அதையே காரியம் ஆவதர்க்காகவே பாராட்டுவதும் ஒரு திறமைதான்.

ஒருவரை பாராட்டுவதால் அவர் மேலும் நல்ல செயல்கள் செய்வதற்கு தூண்டப்படலாம். அந்த பாராட்டே அவருக்கு 'தலைகனம்' தந்து தாழ்ந்துப் போவதற்கும் வழிவகுக்கலாம். மிதமிஞ்சியது ஆபத்தானது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம (பாசனம்) ஒரு சிலர் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வார்கள் அதிலும் பெரிய விளம்பரமாக செய்யவும் முற்படுவார்கள். தன்னைத்தானே பாராட்டிக் கொள்பவர்களும் உண்டு அதற்காக பணம் கொடுத்து மற்றவர்களை அழைத்து தன்னை பாராட்டச் செய்யு தூண்டுபவர்களும் உண்டு.

பாராட்டாதவன் பாராட்டப்பட தகுதி இல்லாமல் போய் விடுவான். அதனால் பாராட்டியே பிழைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கும்போது அதை ஏன் நழுவ விடுவானேன்!.
வளர்க பாராட்டும் செயல்

No comments:

Post a Comment