இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும். அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும் . நேர்மையாக வாழும் நாம் நிமிர்ந்தல்லவா நடை வேண்டும்.
வெட்கப்படுவது ஒரு மனோவியாதிக்கு உட்பட்ட செயல். தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் முறை வேண்டாம். நம்மிடம் எதோ குறை உள்ளதாக கற்பனை செய்து நம்மையே நாம் தாழ்த்திக்கொள்வது ஏற்புடையதல்ல. தாழ்வு மனப்பான்மை நம்மை தாழ்த்திவிடும். நாம் தெரிந்தே தவறு செய்திருந்தால் மனம்வருந்தி திருத்திக் கொள்வது உயர்வு. திருந்தாது தவறு செய்வோர் வருத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அவரை நினைத்துதான் நாம் வெட்கப்பட்டு திருத்தமுயல வேண்டும். நம்மிடம் குறை இருப்பின் நம்மைக் காட்டிலும் கீழ் உள்ளவரை நினைத்துப் பார்த்து அமைதியடைய வேண்டும்.