Showing posts with label வெட்கம். Show all posts
Showing posts with label வெட்கம். Show all posts

Monday, 15 December 2014

வெட்கம் வருவது உடற்கூறு மற்றும் குணத்தைப் பொறுத்தது

சேர்ந்து வா தயக்கம் காட்டாதே
சேர்ந்து வர வெட்கமாக இருக்கிறது
சேர்ந்து வாழ விருப்பம்
சேர்ந்து வர ஏன தயக்கம்
சேர்ந்து போக பார்ப்பவர்கள் பரிகாசம் செய்வார்கள் என பயமாக உள்ளது

இந்த காலத்திலும் இப்படியா இருப்பது
இந்த காலத்திதான் இப்படி இருக்க வேண்டுமாம்
எந்த காலத்தில்தான் சேர்ந்து வருவாய்
புனித பயணம் ஹஜ் செய்யும்போது சேர்ந்து போவோம்
புனித பயணம் ஹஜ் செய்ய காலம் கடத்த விரும்புகின்றாயா
புனித பயணத்தை இப்பொழுதே செய்து விடவேண்டுமென்று விரும்புகின்றேன்

Wednesday, 23 October 2013

கற்பின் உயர்வு

கற்பு இரு பாலரும் பேணிக் காக்கப் பட வேண்டியது
கற்பின் உயர்வு பார்வையில் மனதில் செயலில் உள்ளடக்கம்
கற்பற்ற செயல் களங்கம் சேர்ந்து நிற்கும்

வெட்கப் படுவதற்கு வெட்கப்படுவது உயர்வு
வெட்கமற்ற வாழ்க்கை வேதனைத் தரும்
வெட்கம் இரு பாலர்க்கும் இருக்க வேண்டும்

உயர்வென்ன தாழ்வென்ன இறைவன் படைப்பில்
உயர்வும் தாழ்வும் செய்யும் செயலில் வெளிப்படும்
உய்ர்வுடையார் கற்றார் தாழ்வுடையார் கல்லாதவர்

நாணம் உடையோர் அகத்தின் அழகு பெற்றோர்
நாணம் உடையோர் தாழ்மைச் செயலை செய்ய நாடார்
நாணயமுடையோர் சொற் வாக்கு தவறார்

Wednesday, 3 April 2013

யார் வெட்கப்படவேண்டும்!

 புகழ் வந்த பெரியவரைக்  கண்டால் ஓடி ஒளிவது அவரை கண்டு பேச வெட்கப்படுவது நமது  தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை  விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த  முடியாமல் உள நோய்கள் வர வாய்ப்பு உண்டாக்கிவிடும். அவருக்கு கிடைத்த புகழுக்கு நாமும் ஒரு காரணமாக இருக்கலாம். பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டு ஒதுங்கும். நாம் ஏன் ஒதுங்கவேண்டும்!.ஒதுங்கினால் ஓரம் கட்டப்படுவோம்.

 இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும். அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும் . நேர்மையாக வாழும் நாம் நிமிர்ந்தல்லவா நடை வேண்டும்.

  வெட்கப்படுவது ஒரு மனோவியாதிக்கு  உட்பட்ட செயல்.  தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் முறை வேண்டாம். நம்மிடம் எதோ குறை உள்ளதாக கற்பனை செய்து நம்மையே நாம் தாழ்த்திக்கொள்வது ஏற்புடையதல்ல. தாழ்வு மனப்பான்மை நம்மை தாழ்த்திவிடும். நாம் தெரிந்தே தவறு செய்திருந்தால் மனம்வருந்தி திருத்திக் கொள்வது உயர்வு. திருந்தாது தவறு செய்வோர் வருத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அவரை நினைத்துதான் நாம் வெட்கப்பட்டு திருத்தமுயல வேண்டும். நம்மிடம் குறை இருப்பின் நம்மைக் காட்டிலும் கீழ்  உள்ளவரை நினைத்துப் பார்த்து அமைதியடைய வேண்டும்.