Monday, 7 July 2014
Friday, 4 July 2014
விவாதம் செய்ய தர்க்கமானது
விவாதம் செய்ய தர்க்கமானது
விவாதம் செய்ய முகம் மாற்றமானது
தர்க்கம் செய்ய முகம் கொடூரமானது
விவாதம் ஒரு தலைப்பை பற்றி இருக்க
விவாதம் தர்கமாகியதால் தனி மனித சாடலாகியது
அது சரி இது சரியில்லை என்பது போய்
நான் சரி நீ சரியில்லை என்று மாறிப்போனது
விவாதத்தால் மாறியவரில்லை
விவாதம் காட்சிக் கூடமானது
விவாதம் நட்பை போக்கியது
விவாதம் முடிவைத் தரவில்லை
செயல் படுவோர் விவாதத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்
செயல் படுவோர் விவாதத்தை ஒதுக்கி தான் விரும்பியபடி சட்டமாக்கி விடுகின்றார்
-------------------------------

பாசங்கள் இருப்பதால் கண்கள் குளமாகின்றன
அதி காலை நேரத்தில் கண்கள் குளமாயின
ஒருவர்
"உன்னைக் காணக் காத்திருக்கிறேன்
கண்மணியே..."
மற்றொருவர்
"எங்கள் வாப்பும்மா...
மனசெல்லாம் வந்தாயே ...
அன்பை நிதம் தந் தாயே..."
பாசமானவர்கள் பிரிந்த நிலையை
பாசத்தை தந்தவர்கள் பிரிந்த நிலையை
பாசமாக நெஞ்சமெல்லாம் நினைவில் நிறுத்தி
நேசமாக நினைவு கொள்கின்றார்கள்
ஒருவர்
"உன்னைக் காணக் காத்திருக்கிறேன்
கண்மணியே..."
மற்றொருவர்
"எங்கள் வாப்பும்மா...
மனசெல்லாம் வந்தாயே ...
அன்பை நிதம் தந் தாயே..."
பாசமானவர்கள் பிரிந்த நிலையை
பாசத்தை தந்தவர்கள் பிரிந்த நிலையை
பாசமாக நெஞ்சமெல்லாம் நினைவில் நிறுத்தி
நேசமாக நினைவு கொள்கின்றார்கள்
Thursday, 3 July 2014
இணையதளம் உருவாக்க தற்போது எளிய வழியாக உள்ளது.
எல்லாம் இன்டர்நெட் மயம்! ("மாயம்")
ஒரு தனிப்பட்ட இணையதளம் உருவாக்க தற்போது எளிய வழியாக உள்ளது. இதனால் நீங்கள் முழுமையாக நவீன உலகில் உங்களை பங்கேற்க வழி வகுக்கின்றது மற்றும் நீங்கள் விரும்பினால் அதனை ஆதாயத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பினை அளிக்கும். ஒரு தனிப்பட்ட இணையத்தளம் உங்களது சமூக கருத்துக்களை பரப்புவதற்காக சிறந்த வழியாகவும் அமையலாம்.. தனிநபர் தளங்கள் அமைதியான மிகவும் பயனுள்ள கருவியாக இருக்க முடியும்.
Wednesday, 2 July 2014
எதாவது நல்லது செய்ய வேண்டும்
எதாவது நல்லது செய்ய வேண்டும்
எதாவது நல்லது செய்ய நினைத்து
எதிலாவது கெட்டதில் மாட்டிக் கொள்வேனோ
என்ற நிலைதெரியாத பயம்
எதையும் செய்ய விடாமல் செய்து விடுகின்றது
நடுவீதியில் வாகனத்தில் ஒருவர் அடிபட்டுக் கிடக்க
நல்மனதுடன் வாகனத்தில் அழைத்துச் சென்று
தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க முயல
அரசு காவல்துறை அனுமதி தேவைப்படுமாம்
அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்
ஆபத்தான நிலையாக உள்ளதால்
மாநில தலைநகர் மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லுங்கள் என்கின்றனர்
அழைத்துச் செல்ல பணமும் வேண்டும்
அழைத்துச் செல்ல மற்றவர்கள் துணையும் வேண்டும்
அடிபட்டு தன்னிலை அறியாதிருபவர் உறவினர் உதவி வேண்டும்
அனைத்தும் செய்து முடித்தாலும்
மருத்துவர் மற்றும் காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு
சரியான சான்றிதழும் பதிலும் கொடுக்க வேண்டும்
ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால்
அழைத்த நேரத்திற்கு காவல் நிலையத்திற்கும்
அழைத்த நேரத்திற்கு நீதிமன்றதிர்க்கும் அலைய வேண்டும்

Tuesday, 1 July 2014
Subscribe to:
Posts (Atom)