Wednesday 2 July 2014

ஆசை ஆர்வமாகி தொய்வில்லாத முயற்சி வெற்றியைத் தந்து மகிழ்வித்தது

ஆசை கொண்டேன்
ஆர்வமாக ஆய்வு செய்தேன்
ஆய்வில் தெளிவு கொண்டேன்

கண்காணித்தேன்
முயன்றேன்
முயன்றதில் தளர்ச்சி அடையவில்லை
பிரச்சனை வரும்போது சமாளித்தேன்
சமாளிக்க சிறிது ஓய்வும் தேவையானது
ஓய்வு உத்வேகத்தை தந்தது

சந்திக்க வேண்டியவர்களை சந்தித்தேன்
சந்திப்பு சிந்திக்க வைத்தது
சிந்தனை முறையானது
முறையானது வலுவானது

வேகம் தடுமாற வைக்கவில்லை
ஏற்றம் இறக்கம் இதயத்தை தொய்விக்க வில்லை
தொடர் செயல்பாடு வெற்றியை நோக்கி நகர்ந்தது
வெற்றி மேல் வெற்றி வந்தாலும்
வந்த பாதையை மறக்கடிக்க வில்லை

ஒரு வழிப் பாதை
பல வழியை உருவாக்கியது
பாதைகளை சீர் படுத்திக் கொண்டே இருப்பேன்
பாதைகள் சீர் கெட்டால்
தொடர் செயல்பாடும் கெட்டு விடும்

வெற்றியை பெறுவதில் காட்டும் ஆர்வம்
வெற்றியை தக்க வைப்பதிலும்
தொடர் முயற்சியானது
முயற்சியும் வெற்றியும்
மனதில் உறுதியையும்
மகிழ்வையும் தந்துக் கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment