Friday 4 July 2014

விவாதம் செய்ய தர்க்கமானது

விவாதம் செய்ய தர்க்கமானது
விவாதம் செய்ய முகம் மாற்றமானது
தர்க்கம் செய்ய முகம் கொடூரமானது
விவாதம் ஒரு தலைப்பை பற்றி இருக்க
விவாதம் தர்கமாகியதால் தனி மனித சாடலாகியது

அது சரி இது சரியில்லை என்பது போய்
நான் சரி நீ சரியில்லை என்று மாறிப்போனது

விவாதத்தால் மாறியவரில்லை
விவாதம் காட்சிக் கூடமானது

விவாதம் நட்பை போக்கியது
விவாதம் முடிவைத் தரவில்லை

செயல் படுவோர் விவாதத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்
செயல் படுவோர் விவாதத்தை ஒதுக்கி தான் விரும்பியபடி சட்டமாக்கி விடுகின்றார்
-------------------------------

பாதகம் வந்தால் சொல்லுங்கள்
சாதகம் வந்தாலும் சொல்லுங்கள்

பாதகம் வர புலம்புவது சிறப்பல்ல
பாதகம் வர வழி வகுத்தவரை திருத்துங்கள்

பாதகத்தையும் சாதகமாக்கும் திறமை வேண்டும்
பாதகம் தந்தோரை ஏசுவதை விட திருத்த முயலவேண்டும்

பொறுமை வெற்றியைத் தரும்
உணர்ச்சி தவறிழைக்க வழி வகுக்கும்

No comments:

Post a Comment