Monday, 10 November 2014

அந்த நாட்கள் மீண்டும் வராது !

பார்த்தோம்
நண்பனானோம்
விளையாடினோம்
பகிர்ந்து அருந்தினோம்
கிடைத்ததை பாதியாக கடித்து கொடுத்து தின்றோம்
மின்சாரம் வருமென படிப்பதை தள்ளிப் போடவில்லை
கிடைத்த வெளிச்சத்தில் படிக்க வேண்டியதை படித்தோம்

தாகம் வர நினைத்த இடத்தில நீரை குடித்தோம்
தாகம் வர சுகாதார காப்ப்பீடு பெற்ற நீரை நாடவில்லை
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்டவுமில்லை
கிடைத்த இடத்தில விளையாடினோம்
விளையாடுவதற்கு இடம் தேடி அலையவில்லை
மருத்துவரை நாடி போகவில்லை
மருத்துவர் வேண்டிய நேரத்தில் வீடு தேடி வந்தார்

கால மாற்றம்
பார்க்காமலேயே நண்பர்கள்
கருப்பு வெள்ளை நிறமில்லாது
நிறங்கள் கொடுக்கப்பட்டவர்கள் பார்க்காமலேயே நண்பர்கள் ஆகிறார்கள்
படங்கள் போட்டு உண்டதை காட்டி நம் பசியை தூண்டும் நண்பர்கள்
போடும் படங்களிலும் போலியானவைகளும் உண்டு
எதை வைத்து நண்பர்களானாலும்
வாழ்வில் பாராமலேயே நண்பர்களாக இருப்பார்கள்
இடைப்பட்ட காலத்திலும் எழுதும் வார்த்தைகள்
நண்பர்களை விலக்கியும் விடலாம்

-முகம்மது அலி ஜின்னா 


அடங்கி ,அடக்கி போனதால் வந்த கேடு

கோபம் வருவதுபோல் செயல்படுகின்றனர்
கோபத்தை அடக்கிக் கொண்டேன்

நீரை அதிகமாக குடித்து விட்டேன்
நீரை வெளியேற்ற பொருத்தமான இடம் கிடைக்கவில்லை
நீரை வெளியேற்றாமல் அடக்கிக் கொண்டேன்

சாப்பிட்டது சரியில்லை
வயிற்றை கலக்கியது
வந்ததை அடக்கிக் கொண்டேன்

பருவத்தில் திருமணம் செய்விக்கப் படவில்லை
பருவத்தில் வரும் விருப்பத்தையும் அடக்கிக் கொண்டேன்

அடக்கி அடக்கி ஆயிரம் வியாதிகள் வந்து சேர்ந்தன
அந்த பிரச்சனை மனிதர்களைத் தவிர மற்றதற்கில்லை

மற்றவைகளுக்கு அடக்கும் குணம் இல்லாமையால்
மற்றவைகளுக்கு வரும் வியாதிகள் மனிதருக்கு வருவதுபோல் வருவதில்லை

(நீர் வியாதி .இதய வியாதி அதிக அல்லது குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சில..)

நான் எங்கிருந்தாலும் நானேதான்!

நான் 
ஊர்லே நவாப்ஷா
வெளியூர்லே பக்கிர்ஷா

ரோமுக்கு போனால் ரோமானியனாவேன்
ரோமானியர் என்னை அழைப்பதோ இந்தியன்
மேலப்பாளையம் போனால் மேலப்பாளையனாவேன்
மேலப்பாளையத்தில் உள்ளவர் என்னை அழைப்பதோ நீடூரான்

எங்கு இருந்தாலும் நான்
எப்படி இருந்தாலும் நான்

என்ன என்னிடம் இருந்தாலும் நான்
என்னை எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் நான்தான்
எனக்கு நானே எத்தனை பெயர் சூட்டிக் கொண்டாலும் நான்தான்
எனக்கு உயிர் உள்ளவரை அத்தனை பேரும் சுற்றி வரும்
என்னிடம் உள்ள உயிர் என்னை விட்டு அகன்றால்
என்னை விட்டு அத்தனை பேரும் அகன்றுவிடும்
அத்தனை பெயரும் எனக்கு புதுப் பெயர் சூட்டுவர்
எனக்கு சூட்டும் பெயர் மொவுத் (பிணம் )
எனக்கு அந்த பெயரும் சில மணி நேரங்கள் தான்
 
-முகம்மது அலி ஜின்னா 
*********************************************************************
 நான்????? வெகு இயல்பான தேடல் வரிகள்: வாழ்த்துகள்.
இராஜ. தியாகராஜன்
****************
நானிங்கே என்னுளத்தில் நானென்று நம்புதலோ,
நானென்றுன் உள்ளத்தில் நானென்று நம்புதலோ,
நானிங்கு நானிலத்தில் நானாமோ? நீயுணர்ந்த
நானதுவை என்னுள்ளே நானறிதல் நானாவேன்!
..........நாடோறும் என்னுள்ளே நானறிதல் நானாவேன்!

கண்கட்டு வித்தையெனக் கண்டவர்கள் பூமியிலே
சுண்ணாம்பாய் வெண்சங்கு சூளையிலே சுட்டதுபோல்
மண்சட்டிச் செந்தீயின் மாறிநிறம் பட்டதுபோல்
எண்ணு முணர்வுகளா லேற்றநிலை கொள்வாரே!
..........இப்புவனந் தான்போற்றும் ஏற்றநிலை கொள்வாரே!
 
 

Monday, 27 October 2014

நிறைவேறாத காதலாக இருப்பினும்..!

காதல் அனுபவம்

உன்னை ஒருவள் காதலிக்கிறாள்
உனக்கும் அவளிடம் காதல் உண்டு

அவள் காதலை மறைமுகமாக உன்னிடம் தெரிவித்து விட்டாள்
அவள் காதலை தெரிந்தும் அதனை விரும்பியும் அதனை நீ காட்டிக் கொள்ளவில்லை

காலம் கடந்தது
நீயும் பெற்றோர் உனக்கு திருமணம் செய்விக்க விரும்பியவளை திருமணம் செய்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வை மகிழ்வாய் கடத்துகிறாய்
அவள் நிலையும் அவ்விதே இருக்கும் !

நிறைவோடு அவள் உன் வாழ்வெல்லாம் வந்து காட்சி அளிக்கிறாள்
நிறைவேறாத காதலாக இருப்பினும்
நிலையாக மனதில் நிற்பவளாக அவள் உன் மனதில்
அழியாத கோலங்கள்
இதுதான்
இச்சைக்கு முக்கியம் தராத
உண்மையான காதல்

Mohamed Ali

எனக்கு பிடித்த ஒரு சொல்

எனக்கு பிடித்த ஒரு சொல்
உனக்கும் பிடித்திருக்குமென்று
எனக்கு பிடித்த உன்னிடம் சொல்ல
உனக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கி விடு
உனக்கு பிடிக்கவில்லையென்பதற்காக
ஓலமிட்டு ஊரை கூட்டுகின்றாய்
கூடிய மக்கள் அச்சொல்லின் உயர்வை அறியாரோ!

பொருத்தமான சொல்லை
பொருந்தியவளிடம்
பொருத்தமாக சொல்வதில் பெருமகிழ்வு
பொருளற்ற பல்லாயிரம் சொற்களை விட
பொருத்தமான காதலிக்கிறேன் என்ற சொல்
மேலானதாய் மனதில் பட்டது

காதலிப்பது தவறா
காதலை சொல்வதை தவறா
காதல் என்ற சொல்லே தவறா
ஊரைக் கூட்டி ஓலம் போடாதே

காதல் ஒன்று இல்லையனில்
உலகமே ஒன்றுமில்லாமல் போய்விடும்
 

Saturday, 25 October 2014

நெஞ்சமெல்லாம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்வில் உயர்வைத் தர உதவுகின்றன


(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும், (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். -

திருக்குர்ஆன்: 2:187

"நீங்கள் அமைதிபெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

-திருக்குர்ஆன் 21:30
*********************************************************************

Thursday, 23 October 2014

அறிய வாழ்வை உயர்வாக்கிக் கொள்ளல் வேண்டும்

விரும்பியது கிடைத்தது
விரும்பியது தேடியும் கிடைத்தது
விரும்பியது தேடாமலும் கிடைத்தது
விரும்பியது கிடைத்ததால் வாழ்வு மகிழ்வானது

வாழ்வில் நிறைவு பெற்றதால்
வாழ்வை தொடர விரும்பவில்லையென்று
யாரும் நிறைவாக சொல்வதில்லை