Friday 31 May 2013

ஒரு சொத்து விற்கு முன் மாற்று யோசனை தேவை!


இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தன் சொந்த பணத்தை (சொத்தை) தான் வைத்துக்  கொள்ள உரிமை உண்டு . அவள் பொருளை அவளது கணவன் அவள் அனுமதி இல்லாமல் விற்கவோ எடுத்துக் கொள்ளவோ உரிமை கிடையாது மற்றும் அவள் எந்த உறவு முறைகளுக்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.அது அந்த பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தது
    என் மனைவியிடம்  நகைகள் அவள் போட்டுக்  கொள்ளாமல் வீட்டு அலமாரியில்  முடங்கிக் கிடந்த காரணத்தினால் அதை விற்று ஒரு கட்டிடம்  வாங்கி வாடகைக்கு விட்டால் வருமானம் வருமே என்ற எண்ணத்தில் ஆடிட்டர் யோசனை கேட்டேன். அவர் உடனே 'அந்த நகை உங்கள் சொத்தல்ல அது அந்த பெண்ணைச் சேர்ந்தது' என்றார். நான் 'வாங்கப் போகும் கட்டிடம்  மனைவியின் பெயரிலேயே இருந்து அதனால் கிடைக்கும் வருமானமும் மனைவிக்கே கிடைக்க வழி செய்வேன்' என உறுதி கொடுத்தேன்.பின்பு  ஆடிட்டர் ' நல்லது'   என்றார்.


 கட்டிடம் வாங்கி சில மாதத்திலேயே இரண்டு மடங்கு அதிக விலைக்கு அதனைக் கேட்டவுடன் அதனை மனைவயின் அனுமதியுடன் விற்று பணத்தினை வீட்டுக்கு கொண்டு வந்து புதிய கட்டிடம் வாங்க முயற்சி செய்தேன். நாட்கள் ஓட இருந்த பணமும் நாளடைவில் செலவாகி மாற்று கட்டடம் வாங்க முடியாத நிலை வந்தது. வைத்திருந்த கட்டிடத்தின் வாடகையும் கிடைக்காமல் போனது.
உள்ளதும் போனது என்ற நிலை வேண்டாம்  ஒரு சொத்து விற்கு முன் மாற்று கட்டிடம் வாங்க முதலிலேயே ஏற்பாடு செய்துக் கொள்வது நல்லது.

'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். - புகாரி ஹதீஸ் 56

2 comments: