Monday, 17 November 2014

முத்தத்திற்கு ஒரு போராட்டமானால் முத்தங்கள் தன் மதிப்பை இழந்து விடும்

முத்தம் கொடுடி என்றேன்
உங்களுக்கு வேறு வேலை இல்லையா! என்றாள்

முத்தத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள் என்றேன்
நீங்களும் போய் பேசுங்கள்
உங்களுக்கு வெட்கமில்லையென்றால் என்றாள்

நான் முத்தத்தை அறிந்துக் கொள்ள அங்கு செல்கிறேன் என்றேன்
இத்தனை காலங்கள் நீங்கள் கொடுத்தது அதுவல்லையாஎன்றாள்

உங்களை நான் தடுத்தாலும் எனக்கு அறியாமல் செல்வீர்கள்
நமக்குள் நடந்ததை சொல்லாதீர்கள் என்றாள்
பாப்பாவை முத்தமிட்டேன்
பாப்பா முத்தமிட்ட உடனே துடைத்துக் கொண்டு நகர்ந்தோடியது

முத்தங்கள் வெட்கத்தையும் தரும்
முத்தங்கள் வெறுப்பையும் தரும்

முத்தங்கள் இயல்பாய் இருக்க வேண்டும்
முத்தங்கள் கேட்டு வாங்கும் பொருளல்ல

முத்தங்கள் விற்கப்படும் பொருளானால்
முத்தங்கள் சிகப்பு விளக்கு பகுதியில் கிடைக்கலாம்

முத்தத்திற்கு ஒரு போராட்டமானால்
முத்தங்கள் தன் மதிப்பை இழந்து விடும்

No comments:

Post a Comment