Monday, 10 November 2014

உள்ளங்கள் தூய்மையானால் அனைத்தும் சரியாகிவிடும்

வயதென்னவென்று கேட்டு வெட்கப் பட வைக்கிறார்கள்
வயதை வைத்து மரியாதை கிடைக்கப் போவதுமில்லை
வயதைப் பார்த்து மட்டும் பார்த்து பெண் கொடுக்கப் போவதுமில்லை
வயது வந்தமையால் உய்ர்த்திவிடப் போவதுமில்லை
வயது வந்தவனுக்கு இந்த வேலையெல்லாம் தேவையா என்பார்கள்
கிழடான கவிஞன் கன்னிகளை கவிதையாக வர்ணித்தால் விரும்பிப் படிப்பார்கள்
வயதானவனும் இளமையானவனும்
*********************
ஊரை சுத்தப் படுத்தப் போகிறேன்
முதலில் உன் வீட்டை சுத்தப் படுத்து
வீட்டை சுத்தப் படுத்தி விட்டேன்
சுத்தப் படுத்திய குப்பைகளை எங்கே கொட்டினாய்
தெருவில் கொட்டினேன்
தெருவில் குப்பை தொட்டியில் கொட்ட வேண்டுமென்பது உனக்குத் தெரியாதோ !
குப்பைத் தொட்டி குப்பைகளால் நிரம்பியுள்ளது.அது காற்றில் பறந்து தெருவில் பல இடங்களில் பரவிக் கிடக்கிறது
ஏன் ! ஊர் பஞ்சாயத் அதற்கு ஆட்களை அமைக்கவில்லையா?
இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் தினமும் வருவதில்லை.
***********
முதலில் அனைவரது உள்ளங்களும் சரியாக வேண்டும்
உள்ளங்கள் தூய்மையானால் அனைத்தும் சரியாகிவிடும்



 ‘அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சீர்பெற்று விட்டால், உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது கெட்டு விட்டால் உடல் முழுவதும் கெட்டு விடும். அதுதான் உள்ளம் ‘ (புகாரி, முஸ்லிம்)- நபி மொழி

No comments:

Post a Comment