Saturday, 29 November 2014

ஒவ்வொரு வினைக்கும் ஒவ்வொரு எதிர் வினை உண்டு

ஒவ்வொரு வினைக்கும்
ஒவ்வொரு எதிர் வினை உண்டு
For every action there is an equal and opposite re-action.
நட்பு நாடுகிறோம்
நட்பில் எல்லை இல்லை
கருத்தில் மாற்றம் இருக்கும்
ஆத்தீகமும் நாத்தீகமும் கொள்கையில் மாறுபடும்
மாறுபடுவது தனிப்பட்ட கொள்கை
நட்பு அன்பால் வருவது
நாம் நம் கருத்தை சொல்ல அவர் மாற்றுக் கருத்தை முறையாக சொல்ல முற்படும்போது அதனை கேட்டு நம் கருத்தையும் சொல்லி விளங்க வைக்க முயல்வதே கருத்துகளின் உண்மையான சிறந்த தகவல் பரிமாற்றங்கள்.அதனால் விரோதங்கள் வரக் கூடாது
அவரவரது மார்க்கம் மற்றும் கொள்கைகள் அவரவருக்கு உயர்வுதான்
ஒரே மரத்தில் காய்த்த பழங்களும் ,காய்களும் மாறுபட்டிருப்பது இயல்பு .மாறுபட்டதை காரணம் காட்டி மரத்தையே நாம் வெட்டி சாய்ப்பதில்லை . இது கல்ப்படமல்ல காய்த்தது .

ஒரு சொல்லோ
இரண்டு சொல்லோ
பல சொற்களோ
பயன் தர வேண்டும்

சொல்லுக்கும் பொருள் உண்டு
சொல்லப்படும் சொல்லுக்கும் உயர்வை தர வேண்டும்
சொல்லக் கூடாத சொற்களை சொல்லி விட்டேன் என்ற வேதனை வேண்டாம்
அம்பு எய்தவனுக்கு வலி தெரியாது
அம்பினால் தாக்கப்பட்டவன் அதன் வலியை அறிவான்

No comments:

Post a Comment