Monday, 2 February 2015

நண்மையான காரியங்கள் நிகழ எந்த மார்க்கமும் தடையாக இருக்கக் கூடாது

நாம் உணர்வுப்பூர்வமாக சாதி, நிறம், மற்றும் மதநம்பிக்கை
அனைத்திலும் தீமை தரும் எல்லையை கடந்து நாம் மனித நேயத்தை நிர்ணயிப்பதிலிருந்து மட்டுமே
நாம் உயர்வு நிலை அடைய முடியும்
.நாம் பின்பற்றும் மார்க்கமும் சிறப்படைய முடியும் .
ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் இரக்கமான சூழ்நிலையை உலகில் கொண்டு வர வேண்டும்
எல்லா நிகழ்வுகளிலும் மனிதன் மதிக்கப்பட வேண்டுமென்ற தகுதியை மனிதர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். -
நாயகம் வாழ்வில் ஒரு நிகழ்வு
நாயகம் (ஸல்) ஒரு நாள் அவர்களுடைய நண்பர்களோடு மதீனா நகரில் பள்ளிவாசல் அருகே அமர்ந்திருக்கும் போது ஒரு சவ ஊர்வலம் அவ்வழியே கடந்து செல்வதைப் பார்த்ததும் உடனே எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்.

அவர்களோடு அமர்ந்திருந்த நண்பர்கள் கூறினார்கள் – நாயமே இது ஒரு யஹூதியின் சவ ஊர்வலம் என்றார்கள்.

உடனே நாயகம் -(ஸல்)அவர்கள் – யஹூதியாயிருந்தாலும், கிறிஸ்தவராயிருந்தாலும், மஜுஸியாய் இருந்தாலும், வேறு எந்த மதத்தை சார்ந்தவரின் சவ ஊர்வலமாக இருந்தாலும் சரியே எழுந்து நின்று அவர் செல்லும் கடைசி பிரயாணத்துக்கு மரியாதை செய்யுங்கள்.இறந்தவரும் மனிதர்தானே – என்று சொன்னார்கள்

இஸ்லாம் சகிப்புத்தன்மையை எடுத்து காட்டுகிறது.
மத வெறியை தடுக்கின்றது

இந்நிகழ்வு நண்மையான காரியங்கள் நிகழ எந்த மார்க்கமும் தடையாக இருக்கக் கூடாது என்பதையே விளங்க வைக்கின்றது


(நபியே) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக ! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் கருத்து பரிமாறிக் கொள்வீராக.- குர்ஆன்16:125

No comments:

Post a Comment