Wednesday 4 February 2015

வாசிப்பது வாழ்வோடு ஒன்றியது


வாசிப்பது பல நிலைகளில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது
வாசிக்கும் திறன் மனித இனத்திற்கு மட்டும் தரப்பட்ட உயர்வு நிலை
வாசிப்பது பல வகையாக உள்ளது
வாசிப்பது தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் இருக்கலாம்
தாய் தனது குழந்தைகளுக்காகவும் வாசிக்க முற்படுகின்றாள்
கற்று அறிந்த ஆசிரியரும் மாணவர்களுக்கு கற்பிக்க வாசிக்க வேண்டிய அவசியமாகின்றது
சிலவற்றை மேலோட்டமாக வாசிக்கின்றோம்
சிலவற்றை ஆழ்ந்து வாசிக்கின்றோம்
சிலவற்றை ஆழ்ந்து வாசித்து நினைவில் நிறுத்திக் கொள்கின்றோம்
சிலர் பொழுதுபோக்கிற்காக வாசிக்கின்றார்கள் அல்லது இரவில் தூக்கம் வருவதற்காக வாசிக்கின்றார்கள்
அறிவைத் தேடவும் ,ஆற்றலை வெளிபடுத்தவும் ,விளக்கம் நாடவும் (ஒரு வியாதி வந்தால் அது பொருட்டு அல்லது வேலை நிமித்தமாக இப்படி குறிப்பிட்ட காரணங்களுக்காகவும் )வாசிக்கின்றார்கள்
மனதில் வரும் கவலைக்கு மாற்று மருந்தாகவும் வாசிப்பு நடைபெறும்.

ஊடகங்கள் வாசிப்பின் வளர்ச்சியை குறைத்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றன .
தொலைக்காட்சியில் வரும் நிகழ்சிகள் வாசிப்பின் காலத்தை குறைக்கச் செய்து விட்டன
வாசிப்பு பொருள் ஈட்ட உதவும் என்ற நோக்கம் வந்த நிலையில் மனிதனின் நற் குணங்கள் குறைய வழி செய்து விட்டன
வாசிப்பு மனிதனை பண்படுத்துவதற்கும் ,மனித நேயத்தினை வளர்ப்பதற்கும் .பிறப்பின் அருமையை அறிவதற்கும் அவசியமாக இருக்க வேண்டும்
வாசிப்பு இறைவனால் தரப்பட்ட உயர் அருட்கொடை. அந்த அருட்கொடையை அளித்தவனுக்கு நன்றி செலுத்துவதற்கு அது வழி வகுக்க வேண்டும் .
வாசிக்கும் பழக்கம் வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும்
வாசிக்க வாசிக்க அறிவும் வளரும் அது இறைவனை அறிய வழி வகுக்கும்

No comments:

Post a Comment