Saturday 31 October 2015

இறைவன் கொடுத்த சட்டங்கள் நிலையானது, குறை இல்லாதது மற்றும் இதனை மாற்ற முடியாதது. நன்மைகள் தரக் கூடியது .

மனிதனாய் பிறந்தாலும் பல கடமைகளும் இருந்து சில உரிமைகளும் பெற்றிருந்தாலும் நிம்மதியாய் வாழ பல போராடங்களையும் அளவற்ற தொல்லைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றோம். பார்த்தால் மன்னன் பசித்தால் பரதேசி.
'உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன்' என்று நாம் சொல்ல எல்லாம் இறைவன் அருள் என்று சொல்பவனும் 'உம....வீட்டுக்கு வீடு வாசப்படி' என்று புலம்புவனும் உண்டு . எங்கு நிம்மதியாக வாழ விடுகிறார்கள். இந்த உலகில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்பர் சிலர். 'சரிப்பா வேறு உலகம் ஒன்று உள்ளதே அதற்கு ஏதாவது உருப்படியா ஒரு வழி வகுத்து வாழ்கின்றாயா?' அதற்கும் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.

எதற்கு எடுத்தாலும் போராட்டம். அதிலும் பலவகை போராட்டங்கள்.
கையூட்டு , இலஞ்சம், ஊழல் இவைகளை ஒழிக்க போராடுகின்றோம் என்று சிலர் திரண்டு அதற்காக நினைத்ததை சாதிக்க பல வழிகள் கையாளப்படுகின்றன . முதலில் உண்ணாவிரதம் அது வேறு விதமாக மாறுவதனை பார்க்கின்றோம். சாத்வீகம் போய், சமாதானமும் முடியாமல் இருதியில் அது எங்கு போய் நிற்குமோ! அவர்களுக்கே வெளிச்சம்.
ஒருவர் குடியை ஒழிப்பேன் என்கிறார் மற்றவர் அதை வியாபாரமாக்கி விட முயல்கின்றனர் . அப்பப்பா ஒரே குழப்பம்!
பலபேர் ஒன்று கூடி சட்டம் உருவாக்குகின்றனர் . அந்த இடத்திற்கு மற்றவர் வந்தால் மாற்றுகின்றனர். காலத்தின் போக்கில் மாற்றம் தேவை என்கின்றனர். முழு பெருன்பான்மையோடு வந்துவிட்டால் மார்தட்டி நினைத்ததெல்லாம் செயல்படுத்த துவங்குகின்றனர். அரை அதிகார உரிமை பெற்றவர் செய்யும் தவறுகள் அதிகம் ஆனால் அனைத்து அதிகார உரிமையும் அடைத்தவர் செய்யும் தவறுகள் முழுமை.(Power corrupts; absolute power corrupts absolutely ) எத்தனை மாற்றங்கள் சில காலங்களுக்குள்.

இறைவன் கொடுத்த சட்டங்கள் நிலையானது, குறை இல்லாதது மற்றும் இதனை மாற்ற முடியாதது. நன்மைகள் தரக் கூடியது .

உண்ணாவிரதம் இந்த உலக நன்மைக்காக, பயனுக்காக நடைபெற மற்றவர் நான் நோன்பு வைக்கின்றேன் மறுலோக வாழ்வினை நாடி என்கிறார். மருத்துவர் 'உன் உடலுக்கு ஆகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் ஒரு நாள் வெறும் திரவமாக அருந்த வேண்டும்' என்று சொல்கின்றார். மருத்துவர் சொன்னால் உடன்பாடு. இறைவன் சொன்னால்! அவனுக்கே வெளிச்சம்.

'நோன்பு நோற்றால் உடலுக்கு நல்லது மற்றும் பசி என்ன என்பதனை நீ அறிந்துக் கொள்வாய்' இப்படி ஒரு விளக்கம் தருகின்றனர். உணவு கிடைக்காதவனும்,பசித்திருப்பவனும் நோன்பு நோர்கிறான் இறைவன் சொல்லி விட்டதால். இதற்கு உங்கள் பதில் என்ன!
'நோன்பு வை' என்று இறைவன் சொல்லிவிட்டால் இறைவனை நம்புவனுக்கு காரண காரியங்கள் அதனால் இந்த உலகில் கிடைக்கும் நன்மை தீமைகளைப் பற்றிய ஆய்வு தேவையே கிடையாது. முழுமையாக இறைவனை நம்பு. நோன்பு வைத்தால் உனக்கு நரகம் விலகிவிடும் சுவனம் நெருங்கிவிடும் என்ற கோட்டை கட்டாதே!
இறைவன் சொன்னான் அதன்படி நடக்கின்றேன் என்ற தீவிர நம்பிக்கை வை. இந்த உலகத்தில்தான் பலவித நரகத்தினைப் பார்த்து விட்டோம். சுவனத்திற்கு ஆசைப்பட்டு நரகத்திற்கு பயந்து நாம் இறைவனை நேசிப்பதும் மற்றும் அவன் காட்டிய வழியில் நடப்பதும் அச்சத்தினாலும் ஆசையாலும் வருவதாகிவிடும்.இறைவா! நீ இல்லாமல் நான் இல்லை.உன்னால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள்
இறைவா நீ சொன்னாய் நான் அதன்படி நடக்கிறேன் .
உனக்கு நன்றி பாராட்டும் விதத்தில் நீ ஆணை இட்டதின் காரணமாக உன்னை தொழுகின்றேன்.மற்றும் உன் வாக்குப்படி வாழ முனைகின்றோம்
வாழும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்கச் சொன்னாய் அதன்படி வாழ்கின்றேன் மற்றும் நீ சொன்னதற்கு புறம்பாக
எவர் சொன்னாலும் எந்த சட்டத்திற்கும் அவர்கள் விடும் ஆணைக்கும் உடன்படமாட்டேன் இதுவே என் வாழ்வின் குறிக்கோள் மற்றும் எனது கடமை, அதற்கு உன் அருள் நாடி நிற்கின்றேன், நீ கருணையாளன் அருள் செய்.

No comments:

Post a Comment