Saturday 31 October 2015

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பணம் பணம் பண்ணுகின்றது. முதலில் பணத்தை சேர்த்துக் கொள் பின் அனைத்தும் உன்னுடன் ஒட்டிக் கொள்ளும். பணம் பத்தும் செய்யும். பழம் உள்ள மரத்தினை நாடி பறவைகளும் பறந்து வருவது போல் பாசமும், அன்பும் மற்ற அனைத்தும் பணம் வரும்போது உன்னுடன் ஓடி வரும்.
பணம் வந்தது நேர்மையான உழைப்பினால் மட்டும் வந்தது என்பது உண்மையாக இருக்க முடியாது. பணம் வர தவறான பல வகைகளும் கையாளப்படுகின்றன. பணத்தினால் நல்ல செயல்களும் மற்றும் பாவமான செயல்களும் செய்யப்படுகின்றன. பணம் வந்த வழியினை கேட்டால் உண்மையை யாரும் சொல்லமாட்டார்கள். அது தனது திறமையால் வந்தது என பெருமை பேசுவார்கள். பணம் பேசுவதால் அதனை 'ஆமாம்' போட்டு ஒத்துக் கொள்வார்கள்.

தவறான வகையில் ஈட்டிய பணத்தினை தர்மம் செய்வதாலும் மக்களிடையே புகழை அடைய விரும்புகின்றார்கள் மற்றும் யாருக்கும் தெரியாமல் வணக்கதளத்திலுள்ள உண்டியில் போட்டு இறைவனது அருளை நாடுகின்றார்கள்.(இறைவன் ஒன்றும் அறியாதவன் என்ற நினைப்புடன்) வாழ்கையில் வெற்றி பணத்தினால் மட்டும்தான் கிடைக்கும்
என்ற குறிக்கோளுடன் தேடும் வழி தவறானது என்பதனைப் பற்றி சிந்திப்பதில்லை.பணம் வந்த வழி எப்படி இருந்தால் என்ன அது கிடைத்த பின் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதுதான் இவர்களின் குறிக்கோள்.
பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமையுடையது பணம்தான். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.

அனைவரும் சமமாக இல்லை. ஒருவனுக்கு இருக்க இடமில்லை மற்றவன் மாளிகையில் வாழ்கின்றான். ஒருவன் பசியுடன் இருக்கும் பொழுது மற்றவர் இனிப்பு உண்பதனை தடுக்கப்படும் காலம் வருவதனை இந்த பணப் பேராசைக்காரர்கள் தடுக்க முடியாது. பணம் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.அது நேர்மையான வழியில் ஈட்டப்படவேண்டும் அது சட்டங்களால் மட்டும் வந்து விடாது. மார்க்க வழி கடைப்பிடிப்பதால் அல்லது மனதின் மாற்றங்களால் வரலாம். இல்லையென்றால் மறுமலர்ச்சி போய் புரட்சி வழி வகுத்துவிடும்

வெற்றி பெற்றவர்கள்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
-திருக்குர்ஆன் 3:104

No comments:

Post a Comment