Monday, 7 March 2016

பெண்கள் ஏன் ஆண்கள் முன்னால் செல்லாமல் பின்னால் அல்லது பக்கத்தில் நடக்கிறார்கள் !

ஆண்கள் இயற்கையாக பெண்களை விட வேகமாக நடக்கும் சக்தி பெற்றவர்கள். அதில் சில பெண்கள் விதி விலக்கும் உண்டு.
பெண்கள் மரியாதை காரணமாக ஆண்கள் பின்னால் நடந்து செல்வதும் பண்பாடாக கருதுகிறார்கள். அது தாழ்வு மனப்பான்மையால் வந்ததாக கருதுவது தவறு.
ஆண்கள் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், காப்பாளராகவும் இருக்க வேண்டியதும் இருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதனால் ஆண்களுக்கு அந்த பொறுப்பும் உள்ளது.
மனிதன் பெண்ணுக்கு பாதுகாப்பாக வழியமைத்து செல்வதற்கு சூழ்நிலையின் அவசியமான கட்டாய கால நிலை.
ஆண்களின் பார்வை அதிகமாக பெண்கள் மீது இருக்கும் இக்கால நிலையில் பெண்களின் நிலை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
பெண்கள் வெளித் தோற்றத்தில் முக்கியம் கொடுத்து அவர்கள் உடுத்தும் ஆடைகள் பெண்களை கவர்ச்சிப் பொருளாக மாற்றி விட்டது .
அழகை கண்டு ரசிப்பது இயல்பான மனித குணம். ரசிக்கும் குணமாக இருந்து அதுவே சிலருக்கு பாதகமான எண்ணங்களை உருவாக்கி நோக்கத்தை தவறான பாதைக்கும் ஈர்த்துச் செல்கிறது மிகவும் வேதனையாக அமைந்து விடுகின்றது .

பெண்கள் பாதுகாப்பான நிலையில் வாழ பெண்கள் ஆடை அணிவதில் கவரும் விதத்தில் அணிவதனை தவிர்க்க வேண்டும். அவர்கள் இயன்றவரை ஆண்கள் துணையின்றி அவசியம் அற்ற நிலையில் வெளியில் போவதையும் தவிர்க்க வேண்டும். அவசியம் கருதி வெளியே போனாலும்(வேலைக்கு செல்லும் பெண்கள் அல்லது ஆண்கள் துணை இல்லாமையால் அவசியம் கருதி மருத்துவரிடமோ ,கடைத் தெருவுக்கு பொருள் வாங்கும் காரணத்தாலோ) தன்னுடன் ஒரு துணிவான பெண்ணையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் .
ஆண்களோடு போனால், போகும்பொழுது கணவனோடு (அல்லது திருமண செய்து கொள்ள முடியாத அண்ணன், தம்பி ,அப்பா மற்றும் அவ்வகை உறவுகளோடு) செல்லும்போது அவர் பக்கத்தில் சேர்ந்து செல்வது மிகவும் பாதுகாப்பு.

No comments:

Post a Comment