Thursday 31 March 2016

உன் பார்வையில் நான் தெரிவதில்லை

உன் பார்வையில் நான் தெரிவதில்லை
என் பார்வையில் நீ தெரிகின்றாய்

நீ போகும் வழியில் நானும் தொடர்கின்றேன்
நான் போகும் வழியும் நீயும் பார்க்கின்றாய்

வால் வீச்சில் விழாத நான்
வார்த்தை வீச்சில் விழுந்து போனேன்

விழுந்த நான் விழுந்தபடியே கிடக்க
வேறு வழி நோக்கி கவனத்தை திருப்புகின்றாய்

மயங்கியதின் காரணம் கேட்கவில்லை
மயக்கத்தைப் போக்க நற்செயல்கள் செய்யவில்லை


மயக்கத்தின் காரணம் கேட்டால்
சொல்வது பொய்யாகவே தோன்றும்

வாள் வீச்சில் வீழ்ந்தால் மரணம்
சொல் வீச்சில் வீழ்ந்தால் மயக்கம்

உன் சேவைகளை உயர்த்தி பேசுவோர் உயர் மக்கள்
உன் சேவைக்கு உதவி செயயவே உன்னோடு இருக்க விருப்பம்

மற்றவருக்கு நீ கொடுத்த இடம் உயர்வானது
மற்றவருக்கு நீ கொடுத்ததுபோல் எனக்கும் இடம் தந்துவிடு

நீ ஒரு தேனியாக வலம் வருகின்றாய்
நான் உனக்குப் பூவாக இருப்பேன்

நான் உன் பார்வையில் படாமல் போனால்
நீ உனக்குத் தேவையான தேனைச் சேர்க்க இயலாமல் போகலாம்

காத்திருக்கின்றேன் உன்னோடு சேர்வதற்கு
காலத்தை கடத்தி விடாதே

மற்றவர்கள் என்னை பறித்துக் கொள்வதற்குள்
உனக்கு விரும்பியதை என்னிடமிருந்து சேர்த்துக்கொள்

என்னை விரும்புவோர் பலர்
என்னால் உனக்கும் பலன் கிடைக்கும்

என் வழியே நீ பெற்றதால்
உன் வழியே மற்றவரும் பலம் பெற்று பலம் பெறுவர்

பலரை நீ பெற்றாலும்
என்னை நீ பெறாமல் போனால் உனக்கு பலமில்லை

No comments:

Post a Comment