Sunday 18 June 2017

நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

விடியல் வருமுன்னே விழிகளில் நீர் பாய்ச்சி
வைகறையில் நீல வானத்தை நோக்கி
விழிகள் நட்சத்திரங்கள் போல் இமைக்க
வழியைப் பார்த்து புத்துணர்ச்சி பெற்று நடை போட
அவனை நேசித்து அவனுக்காக அவனில்லத்தில் தொழுதேன்.

நேற்றைய வேலைகள் இன்று நெடு நேரம் உறங்க வைக்க
விடியல் வரு முன்பே இறைவனைத் தொழுதல் கடமையாய் இருக்க
இறைவனைத் தொழுதலை தாமதிக்கச் செய்ய
இன்றைய விடியலின் அழகையும்
இயல்பான இனிய மகிழ்வையும் இழக்க நேரிட்டது


இறைவா! எனது கண்களைப் பார்க்காதே
இறைவா! எனது இதயத்தைப் பார்
இறைவா! என் குறை நிறை நீ அறிவாய்
இறைவா! அறியாக் குறையை நீக்கி
இறைவா! நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

No comments:

Post a Comment