Thursday 1 June 2017

கருப்பு நிறமுடையவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள் .

கருப்பு நிறமுடையவர்கள் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் களையாக இருப்பார்கள் .
கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு வெப்பத்தினால் உண்டாகும் தோல் வியாதிகள் வருவது குறைவு. சாதனை செய்வதிலும் அவர்கள் குறைவதில்லை.
கருப்பு பணம் வைத்திருப்பதுதான் தவறு.
கருப்பு நிறமுடன் இருப்பது தவறில்லை.
தான் ஒரு கருப்பு நிறமுடையவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் ஒரு காலமும் வரக் கூடாது. அவ்விதம் நினைத்திருந்தால் வெள்ளையர்கள் நிறைந்த நாட்டில் ஆப்ரகாம்லிங்கனும்,ஒபாமாவும் உயர்ந்த பதவிக்கு வந்திருக்க முடியுமா!
நாம் தான் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம்.


குழந்தை பிறந்தவுடன் 'குழந்தை கருப்பா சிவப்பா' என முதல் கேள்வியை வினவுகின்றோம்.
குழந்தை கிடைத்ததே இறைவனது அருள். அதிலும் கூன், குருடு மற்ற குறைகள் இல்லாமல் இருப்பதற்கே இறைவனிடம் காலமெல்லாம் நன்றிக் கடனாக இறைவனைத் தொழுது வரவேண்டும்.
பிறப்பு ஒன்று இருக்கும்போது இறப்பு என்பது உறுதியாகிவிடுகின்றது.
இதற்கிடையில் இதில் எந்த நிறத்தில் பிறந்தால் என்ன?
வாழும் காலத்தில் என்ன சேவை செய்தோம்! என்பதுதான் முக்கியம்.
கருப்பு நிறமுடன் பிறந்து விட்டதால் கலக்கம் ஏன்!
பிறப்பின் நிறத்தை யாராலும் உருவாக்க முடியாது
இந்திரியத்தின் உயிரணுக்களில் லட்சத்தில் ஓர் உயிரணு கர்பைக்குள் புகுந்து உயிர்பெற்று குழந்தையாக வளர்கின்ன்றது (அது இரண்டு புகுந்தால் இரட்டை குழந்தைகள் .இப்படியாக ..)
இரட்டை குழந்தைகளில் ஒன்று ஒரு நிறத்திலும் மற்றொன்று மற்றொரு நிறத்திலும் இருக்கக் காண்கின்றோம்
நிறத்தை கொடுத்து பிறப்பிக்கச் செய்பவன் ஆற்றல் மிக்க இறைவன்
அவனே பிறந்த குழந்தைக்கும் ஆற்றலையும் தந்து விடுவான்
ஆற்றலை வளர்த்துக் கொள்வது நிறத்தில் இல்லை .அது மாறாக அவன் வளர்த்துக்கொண்ட வல்லமையில் உள்ளது
தவறு செய்யாமல் வாழ்வதே உயர்வு.
வாழும் காலத்தில் சாதனை செய்தாக வேண்டும்
.
-முகம்மது அலி

No comments:

Post a Comment