மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!
1 பெட்ரோல் விலை ஏற்றம் . ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2 கேஸ் விலை அதிகம் ஆனாலும் தேவைக்கு அது கிடைப்பதில்லை
3 பஸ் டிக்கெட் விலை அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் அது நேரத்திற்கு வந்து சேர்வதில்லை!
வந்து சேர்ந்தாலும் இடம் கிடைபதில்லை
4 ஒரு கிரிகெட்டிற்கு கோடிக்கணக்கான பணத்தைக் செலவழிப்பார்கள் ஆனால் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் விளையாட இடமில்லை.
5 உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.ஆனால் நடைபாதை நடக்கக் கூடிய பாதைகளாக இல்லை
6 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
7 மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
8 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
9 பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!
10 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!
11 அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!
12.தண்ணீருக்கு வரியில்லை ஆனால் தேநீர் தூளுக்கு வரி உண்டு. சாயம் கலந்த தேயிலைத் தூள் கலந்த தேநீரை குடிப்பதின் மூலம் வாயை அடைக்கிறது. உதட்டில் வரி வந்து விளையாடுகிறது.
தொடரும் இந்த நிலை. இன்னும் மாறுவது புதுமையான மறைமுக வரி வழியே!
No comments:
Post a Comment