Saturday 23 January 2021

ஆசைமேல் ஆசை

 


ஆசைமேல் ஆசை கடலோர கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை

பாசமாயிருக்கும்  கடலோர மரக்கலராயர் கன்னியரை மணமுடிக்க ஆசை

பிரியமாய் வைத்திடுவார் மரக்கலராயர் மாமனார் வீட்டு  உறவினர்

விருந்தோம்பலில் ருசிகரமாய்  வயிறுநிறைய வகைவகையாய் தந்திடுவார்

உணவோடும் இருக்க இடமும் சிறப்பாக கிடைத்துவிடும்

மாமன் வீட்டுக்கே கல்யாணம் பண்ணி குடி போயிடலாம்

கல்யாணத்தன்றே கணக்குப்போட்டு தந்துடுவார் பெண்ணோடு குடியிருக்க வீட்டையும், சொத்தையும்

மாமன் சாக வேண்டுமென்றும் சொத்து கிடைக்க வேண்டுமென்று  வேண்டியதில்லை

திருமணத்தன்றே பெண்ணோடு உயிலையும் கொடுத்தமையால்

நடு நிசியில் மாப்பிள்ளை களைத்திடாமல்ஜாமப்பணியாரமும் கொடுத்திடுவார்

பெண்மக்களை போடி வாடி என அழைக்காமல் மரியாதையாக அழைத்திடுவார்

தெரியாமல் குதிரைவீரர் (இராவுத்தர்) பெண்ணை கட்டிக் கொண்டு குதியாய் குதிக்கின்றேன்

அறியாமல் வந்த என்னை அவர் குடும்பத்தார் ஆட்டிப் படைக்கின்றார்

கடிவாளம் போட்டு கட்டிப் போட்டார்

கிடைத்த பணமும் சேமித்த சொத்தும் குதிரைப்(இராவுத்தர்) பெண்ணை பராமரிக்கவே போயிற்று

ஆடியோடி நிக்கயிலே ஆசை அடங்கவில்லை

கடலோரம் போய் கட்டிக் கொள்ள கொள்ளை ஆசை

 

மரம்+கலம்+ராயர்மரத்தால் செய்யப்பட்ட கலம்(கப்பல்)உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது.

(இராவுத்தர்=குதிரை ஒட்டி வணிகம் செய்தவர்)

No comments:

Post a Comment