Friday 22 January 2021

திருமண வாழ்த்து

 


இறைவனால்  உனக்கென சுவனத்தில் உறுதி செய்யப்பட்ட  மணமகளை நீ அடைய

உங்கள் பெற்றோர் எடுத்த முயற்சி சிறப்பாக முடிந்தது

இறைவனின் அருளால் நீங்கள் சிறப்பாக பல்லாண்டு வாழ இனி உங்கள் மன ஒற்றுமையே இல்லற வாழ்க்கை நல்லறத்தோடு உங்கள் வாழ்வினை மகிழ்வடையச் செய்யும்

உங்களது திருமணத்தில் உங்களை உற்றார் உறவினர்கள் நல்லோர்கள் வாழ்த்தினார்கள்  

அவர்களின் வாழ்த்துகள் சிறப்படைய அனைவருடன் அன்புடன் ஒற்றுமையாய் தொடர் தொடர்புகள் இருக்கச் செய்து வாழ்வினை சிறப்பாக்கிக் கொள்வது உங்கள் நல்மனதின் இருப்பிடமாக இருக்கட்டும்

 

இறைமறை இதயத்தில் இருக்க  

இல்லறமும் நல்லறத்துடன் அமைந்துவிடும்

 குறையற்ற  வளங்களும்

நிறைவான நலத்துடன்

பல்லாண்டு செழிப்புகள் நிறைய

நன்மக்கள் பெற்றேடுத்து

வளமோடு வாழ்க்கை சிறப்பாகும் 

 

இறைவனைத் தொழுது வேண்டி முயல

சோதனைகள் சாதனையாகிவிடும்

இறைவனின் நேசம் போற்றுதலாக அமையும்

ஒருவர் அவருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார். ஒருவர் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஏங்குகிறார்.

எல்லா அன்புகளிலும் கடவுளின் அன்பு மிகவும் ஆழமானது, இது அவரை இறைவனின் உண்மையான நட்பின் நிலைக்கு கொண்டு செல்லும். இந்த நிலையில்தான் தொடர்ந்து ஒருவரின் அன்பு, போற்றுதலாக அமையும் ,

இறையருளால் நாயகத்தின் வாழ்த்துதளால் வாழிய வாழியவே பல்லாண்டு

பாரகல்லாஹு (க்) வபாரக அலை(க்) வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

 

அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!

 

 அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

 

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.





No comments:

Post a Comment