Thursday 21 January 2021

அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ்

 


அல்லாஹ் அல்லாஹ் 

யா அல்லாஹ் 

உன்னால் தரப்பட்ட இறைவேத  வார்த்தைகள் அழகானவை

திருக் குர்ஆனிலுள்ள   வரிகள் கவிதை நயம் கொண்டவை

மறைவேதத்ல் சொல்லப்பட்டவை   உயர்வானவனை  

அதனைப்போல் யாரும் எங்கும் பார்க்கவில்லை

இறை வேதம் பொய்யை பெற்றிருக்கவில்லை

அவை  பெற்றிருப்பதெல்லாம் உண்மையன்றி வேறில்லை

அதனில் கண்டபடி  காலத்தின் நடப்புகளனைத்தையும் நினைத்தபடி நடத்திச் செல்கின்றாய் 

நீயல்லவோ  அனைத்து உயர்வுகளையும் பெற்றிருக்கிறாய்


நீ உண்மையைக் எனக்கு காட்டி விடு

நீ மனதை மென்மையாய் ஆக்கி விடு

நீ மனதின் வடுக்களைப் போக்கி விடு

நீ வாழ்வின் வழி காட்டியாய் இருந்து விடு

நீ வாழ்வில் மன வலிமையைத் தந்து விடு


நீ எனக்கு உன்னைத் தொழுதலின் வழியைக் காட்டி விட்டாய் 

நான் உன்னைத் தொழுதலால் 

நீ என்னோடு எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்கிறாய்

நீ எங்களுக்கு கொடுத்த  திருமறையிலிருந்து  என்னை பாதுகாக்கிறாய்

நீ இருக்குமிடத்தில் நான் இருக்கின்றேன் 

நீ இல்லா இடத்தில நான் இருப்பதில்லை


நீ தான் என் வாழ்வின் தொடக்கம்

நீ தான் என் வாழ்வின் வழிகாட்டியாய்  இருப்பாய்

நீ தான் அல்லாஹ் (இறைவன்)உன்னைத்தவிர வேறு யாருமில்லை 

நீ நாயகம் வழி தந்த அருட் வாசகம் இறை வேதம்

நீ காட்டிய வழிகளே எங்களை  சுவனத்திற்கு இட்டுச் செல்லும் .



No comments:

Post a Comment