Tuesday 11 May 2021

!அம்மா !

 Mohamed Ali: 

அம்மா !


நீ இறக்கவில்லை 


நீ இருக்கிறாய் 


நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாய் 


நீ இன்றேல் நான் ஏது !


என்னைப் பெற்று மகிழவே 


உன்னை உன் அம்மா பெற்றால் 


என்னைப் பெறவே


உன்னை இறைவன் உலகில் தோற்று வைத்தான் 


உன்னை தோற்று வைத்தவன் 


உன்னை தன் வசமாக்கிக் கொண்டான்


என்னை சில காலங்கள் 


இவ்வுலகில் உலவ விட்டு 


என்னையும் உன்னைப்போல் 


தன வசமாக்கிக் கொண்டு 


உன்னிடத்தில் சேர்த்து வைப்பான்


உன்னை இறைவன் முதலில் தன் வமாக்கிக் கொண்டது 


என்னை உனக்காக இறைவனிடம் வேண்டத்தான்


முற்றிலும் அறிந்த அவன் 


முறையாகவே செயல்படுவான்


உனக்காக இறைவனை நான் வேண்ட 


இறைவன் நமக்கு கொடுத்த் அருள்தான் 


அவன் அருட்பெரும் கருணையுடையோன்

 Mohamed Ali: 

=========================------------

அம்மாவை நான் பத்து வயதாக இருக்கும்போது இறைவன் அழைத்துக் கொண்டான் 


அம்மா காட்டிய பாசம் மறையவில்லை ,மறக்கவில்லை 


முதுமை நிலையிலும் அம்மாவின் நினைவு இருந்துக் கொண்டே இருக்கின்றது 


அம்மாவுக்காக இறைவனிடன் வேண்டாத நாட்களில்லை


'அம்மா'வைப் பற்றி யார் எழுதினாலும் விரும்பிப் படிப்பேன் 


அனாதைகளுக்கும் அம்மாவின் நினைவு இருக்கும் 


அம்மாவை அனாதையாக்கியவரை விட கொடியோர் உலகிலில்லை

: ----------------------------------------

li: அம்மா உனை நினையாத நாள் உண்டோ !


அம்மா உனக்காக வேண்டாத நாள் உண்டோ!


அம்மா நீ இல்லாமல் நான் ஏது ?


அம்மா நான் வாழும் நாளெல்லாம் உன் நாள்தான்


அம்மா நான் பாசம் அறிய வைத்தவள் நீ தானே


அம்மா நான் தவறு செய்தாலும் அன்போடு அறிய வைத்து திருத்தியவள் நீ தானே


அம்மா உன் மடியில் சுவனம் உள்ளது யென நாயகம் சொல்லியதை உணர்வால் அறிந்தேன்


அம்மா நீ இறைவன் அருளால் சுவனம் சென்று விட்டாய்


அம்மா நான் சுவனத்தை தேடுகிறேன் உனக்கு வழி காட்டிய இறைவன் வழியிலேயே


 மனதில் எங்கிருந்தோ ஒரு பாசமும் இரக்கமும் வந்தது!






 அம்மாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம். நான் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் எனக்கு ஆனந்தன் என்ற பெயர் எனக்கு வைத்திருப்பாளோ!




  நான் குழந்தையாக இருக்கும்போதே எனது அப்பா இறந்து விட்டதால் அப்பா வைத்திருந்த பொட்டிக் கடையை தானே தொடர்ந்து நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து என்னை படிக்க வைத்தாள். பாவம் அம்மாவுக்கு ஒரு கண்தான்,  மற்றொரு கண் இருக்குமிடம் பள்ளமாக  இருக்கும்.  ஒரு கண் பார்வையோடு வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு கடையையும் கவணித்துக் கொள்வாள் . 




 சிறிய வருமானத்தைக் கொண்டு அரசாங்க உதவிப் பணமும் பெற்று பொறியாளர் படிப்பு வரை என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தாள். என் சிறுவயதில் அம்மாவின் அழகான முகத்தில் எனக்கு குறை தெரியவில்லை. ஒற்றைக் கண்ணுடன் இருப்பதால் அம்மாவின் முகம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்ற  மனம் எனக்கு வந்தது உடன் படிக்கும் மாணவர்கள்  ' உங்க அம்மாவுக்கு ஒரு கண் பார்வைதானே! ' என்று கேட்டதிலிருந்து.  கல்லூரிக்கு அம்மாவை என்னை பார்க்க வரவேண்டாம் என்று சொல்லி விட்டதிலிருந்து அவள் என்னைப் பார்க்க கல்லூரிக்கு வருவதில்லை.




  படிப்பு முடிந்து நல்ல வேலை சென்னையில் கிடைத்தது . சென்னையில் பொறியாளர் வேலையில் கிடைத்த வருமானத்தில் சிறிது தொகையை அம்மாவுக்கு சிறிது காலம் அனுப்பி வந்தேன். காலம் கடக்க ஊருக்கு சென்று வருவதையும் நிறுத்தி விட்டேன்.




 காதலித்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு ஒரு பெண் குழந்தையுடன் சென்னையிலேயே அம்மா இல்லாமல் குடும்பம் நடத்தி மகிழ்வாக இருந்தேன். ஒரு நாள் எதிர் பாராமல் என்னைப் பார்க்க அம்மா வந்து விட்டாள். அவள் வந்த போது மனைவியும், குழந்தையும் இருந்ததால் அவளை அறியாததுபோல் அவள் முகவரி மாறி வந்திருப்பதாக சொல்லி அனுப்பி விட்டேன். அம்மாவும் என் குணமறிந்து, என் நிலைமையைக் கருதி  நான் நன்றாக இருக்க வேண்டுமென்ற நல்ல மனதோடு அமைதியாக ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டாள். அம்மாவை என் மனைவியும், குழந்தையும் பார்த்திராததால் பிரச்சனை ஒன்றும் வரவில்லை.




அலுவலகம் வேலைக் காரணமாக அம்மா இருக்கும் என் சொந்த ஊருக்கு அவசியம் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் எங்கள் ஊருக்கு நான் மட்டும் சென்றேன்.


அங்கே என்னை பார்த்த ஒரு பெரியவர்.


 'தம்பி நன்றாக இருக்கிறாயா; என்று அன்பாக விசாரித்தார்.


அம்மாவுக்கு பணம் அனுப்புகிறாயா?' என்றதுடன் பாவம் உன் அம்மா உடல் நிலை சரி இல்லாமையால் கடையையும் விற்று விட்டு நீ அனுப்பும் பணத்தில் வாழ்கிறாள்' என்றார் அந்த பெரியவர்.




  மனதில் எங்கிருந்தோ ஒரு பாசமும் இரக்கமும் வந்தது. அவசர அவசரமாக அம்மா இருக்கும் வீட்டை நோக்கி ஓடினேன். வீட்டில் சுருண்ட நிலையில் கடுமையாக பாதிக்கப் பட்ட நிலையில் திணறிய மூச்சோடு தன்னிலை மறந்து தனது கையில் ஒரு தாளை வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அந்த கடிதத்தை அவள் கையிலிருந்து எடுத்துப் படித்தேன். அதில் நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு விபத்தில் அடிப்பட ஒரு கண் பார்வை போனதால் தன் மகன் ஒரு கண் பார்வையோடு இருப்பதை விரும்பாமல் தனது கண்ணை எனக்காக கொடுத்து இரு கண் பார்வையோடு நான் இருக்க தன் கண்ணை தியாகம் செய்துள்ளதனை அறிய வந்தேன் . என் இருகண்களிலிருந்தும் அருவியாக நீர் கொட்டியது.அம்மாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்படும்போதே அம்மாவின் உயிர் அவளை விட்டு பிரிந்துப் போனது .




அத்தனை சிரமத்தையும் அடக்கிக் கொண்டு என்னைப் பற்றி ஒரு குறையும் சொல்லாமல் என்னைப் பற்றி உயர்வாகவே சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாளாம். அதனால் ஊர் மக்கள் ஒரு குறையும் என்னைப் பற்றி சொல்லவில்லை. ஊர் மக்களுக்கு எனக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரியாது. இறந்தும் என் பெயர் கெடாமல் இருக்கச் செய்து விட்டாள். வாயடைத்துப் போய் செய்ய வேண்டிய கடமையை முடித்து பாரமான மனதுடன் சென்னைக்கு திரும்பினேன்.








மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான். (நபிமொழி)


 “தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து அதுதான் நம் வாழ்வின் அடித்தளம். அம்மா இல்லாமல் நாம் ஏது? அந்த அம்மா இருக்கும் போதே அந்த தாய்க்கு பணிவிடைச் செய்து நன்மையைப் பெற்றிடுவோம். தாய் போனபின் அழுவதனால் ஒரு பயனுமில்லை. 




அம்மா உன் படம் வேண்டாம்


நீயே என் உள்ளத்தில் பதிந்து விட்டாய்




உனது கனிந்த கரங்களால் அணைத்துக் கொள்


உனது மென்மையான் உதடுகளால் கன்னத்தில் முத்தங்கள் கொடு


உனது உள்ளங் கைகளால் தலையில் தடவிக் கொடு


உனது மனதின் இசையால் உறங்கச் செய்து விடு




நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லி விடு


நான் உன்னைப் போலவே இருக்க விரும்புகின்றேன்




உனது அளவற்ற வாழ்த்துகள்


எனக்கு சிறப்பான வாழ்வைத் தரும்




உலகத்தில் பெற்ற அழகுகள் அனைத்தும்


உன்னால் நான் பெறப் பட்டவைகளே




அம்மா அணைத்துக் கொள்


அம்மா உன் அரவணைப்பில்


நான் உறங்க விரும்புகின்றேன்




அம்மா உன் மடியிலேயே சுவனம் உள்ளது


அம்மா உன் மடியிலேயே சுவனத்தின் சொத்துக்கள் நிறைந்துள்ளன




அம்மாவின் நினைவில் அவர்களுக்காக


அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டாத நாட்களில்லை




அம்மா மனதிலேயே உறைந்துவிட்டதால்


அம்மாவை மறந்தாலல்லவா


அம்மாவை நினைப்பதற்கு


[09:49, 11/05/2021] Mohamed Ali: நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்


உனது கண்கள் அந்த எண்ணங்களைப் பேசுகின்றன,


உனது குரல் ஒருபோதும் அதனைச் சொல்லவில்லை


உனது வலி மற்றும் துக்கம் அனைத்தும் மறைத்து


உனது மென்மையான இதயத்தோடும் இரக்கத்தோடும்


உனது வாழ்க்கையை ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்தாய்,


உன் பாசம் முடிவடையாதது


ஒவ்வொரு கணமும் அது ஒரு புதிய ஆரம்பம்


உன் வார்த்தைகள் மற்றும்


உன் நிலையான கவனிப்புடன்


உன் மென்மையான தொடுதல்


அது என் மனதை விட்டு போகும் போது


அமைதியான இறுதி தான்


எனக்கு முடிவு




ஒரு ரோஜாவின் மெல்லிய இதழ்கள் கனவுகளையும் இலக்குகளையும் ஒன்றாக வைத்திருக்கின்றன


அதன் தண்டுக்கு அது பிடிக்கும்


உன் பாசம் என்னைப் பின்தொடர்கிறது


நான் தொடர்ந்தும் தொடர்ந்து வருகிறேன் -


நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்,


என் கண்ணீரை உன் மென்மையான உடலில் பரவ விடுகின்றேன்


என்னை இறுக்கமாக பிடித்து என் அச்சத்தை அடக்கு


இப்போதும் , எப்போதும் உனது உண்மையான பாசம்


யாரிடமும் இருப்பதைவிட என்மீது அதிகம்


அதனை நீயும் அறிந்திருப்பாய்


நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் - இப்போது மற்றும் எப்பொழுதும் - அல்லாஹ்விடமிருந்து நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் அம்மா


அம்மா,


நான் உன்னை இழந்து வாழ்கின்றேன்


நான் உன்னை இழந்ததால்


நான் மிகவும் கஷ்டப்பட்டேன்




நான் இன்று உனக்குப் பிடித்த நாற்காலியில் தனியாக அமர்ந்து


என் வாழ்க்கையைப்பற்றி நினைத்து அதிசயிக்கின்றேன்


அது என்னை உங்கள் ஞாபகத்தில் அழைத்துச்செல்கின்றது




உங்கள் மகளாகிய நான் வளர்ந்து விட்டேன்


உங்கள் மகள் உலகத்தை சந்தித்து விட்டாள்


உங்கள் மகள் சோதனைகளைக் கடந்து சவால்களை சமாளித்து விட்டாள்


இவைகள் அனைத்தும் என்னால் செயல்படுத்த முடிந்தது


இறைவனிடம் எனக்காக நீ செய்த பிரார்த்தனையால்தான்




நான் எக்காலமும் உன் நினைவோடு


அதிலும் அதிகமாக உன் நினைவோடு சோதனைகள் நிரம்பிய இருண்ட காலங்களில்




நான் எனது வாழ்வின் முன்னேற்றத்திற்காக


நீ எனக்காக உதிர்த்த உனது மனதின் முனங்களை


நான் நினைவுப்படுத்தி உயர்வாக கடுமையாக செயல்படுவேன்


என்னை சூழ்ந்து நின்ற கொந்தளிப்பு மற்றும் கடுமைகள் அனைத்தும் விலகிப்போகும்


அந்த வலிமை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி


: மறைப்பதென்ன மகனே


ஒன்றுமில்லை அம்மா




கையில் ஒரு பை


பையில் ஒரு பொட்டலம்


மகனின் செயல் தாய்க்கு தெரியாதா


வாங்கியது தான் வாங்கினாய்


வாங்கியதில் கொஞ்சம் சேர்த்து வாங்கலாமே


சேர்த்து வாங்கியிருந்தால்


உனது மனைவிக்கு கொடுப்பதோடு


உனது சகோதரிகளுக்கும் சேர்த்து கொடுக்கலாமே




நீயும் உன் மனைவியும் மகிழ்வதோடு இருக்க


உங்களோடு சேர்ந்து அனைவரும் மகிழ்வார்களே




பூவும் இனிப்பும் யாவரும் விரும்பும் பொருளாக இருக்க


பகிர்ந்து கொடுக்க யாவரும் உங்களை வாழ்த்தி மகிழ்வார்கள்


[09:49, 11/05/2021] Mohamed Ali: ‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியும்’






அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்!


 தந்தை பணம் செலவழித்து என்னை ‘பெரிய, படிப்பு வைத்தார், படிக்கும்போது அவர் என்னை மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அவருக்கு மனதிருப்தி அடையாது. ‘இன்னும் நன்றாக படித்திருந்தால் அதிகமாக மார்க் வாங்கி இருக்கலாமே’ என கண்டிப்பார். அத்துடன் மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார். உடனே அம்மா வந்து ‘ஏங்க இப்படி அவனை குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க’ என்று சொலும்போதுஎன் மனம் அமைதியடைய ஆரம்பிப்பதற்குள் அடுத்த வார்த்தை தந்தை அம்மாவைப் பார்த்து கோபமாக ‘உனக்கு என்ன தெரியும் நீ படிதிருந்தால்தானே’ என்பதுடன் ‘ நான்ல வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அவன் படிப்புக்கு வாரி கொட்றேன். முட்டையிட்ட கோழிக்குதானே அதன் சிரமம் தெரியும்’ என்பார் அம்மா. ‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியுமென்று’ முனுமுனுத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட என் மனது மிகவும் வருத்தமாகி கண்களிலிருந்து நீர் சுரக்கும். படிப்பையே நிறுத்தி விட்டு என்கேயாவது போய்விடலாம் என்று நினைக்கும். அம்மாவை விடுத்துப் போகக்கூடாது என்ற வைராக்கியத்தில் தொடர்ந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று படிப்பை முடித்தேன்.


  இனி வேலை தேடும் படலம் ஆரம்பமானது. தினம் அது நிமித்தமாக கடுமையாக முயற்சித்தேன். திரும்பவும் அப்பா ஆரம்பித்து விட்டார் ‘அப்பொழுதே சொன்னேன் கம்ப்யூட்டர் இன்ஜினியர் படிக்க ஆனால் இவன் மெக்கானிகல் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தான்.அதற்கு இவன் அம்மா வேறே சிபாரிசு அவன் இஷ்டத்திற்கு படிக்கட்டுமே என்று அதான் இப்ப வேலை தேடி அலையறான் நான் சொன்னபடி கேட்டிருந்தா அருமையான வேலை நல்ல சம்பளத்தோட கிடைத்திருக்கும்’ என்பார்.




 நேர்முக தேர்வு சென்று களைத்து போய் வரும்போது அப்பா கேட்பார் ‘இந்த தடவையாவது வேலை கிடைக்குமா?’ கிடைச்சாலும் சம்பளம் ஒன்னும் பெரிசா இருக்காது. பர்மனென்ட் வேலையா இருக்குமா? இவன் நிலையா ஒரு இடத்தில இருக்க தகுதியான தன் திறமையை வளர்த்துக்குவானா? இப்படி அடுக்கடுக்கான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து அடைமழைப் போல் கொட்டிக் கொண்டேயிருக்கும்.அது எனக்கு நெருப்பில் எண்ணையை ஊற்றியதுபோல் இருக்கும். அந்த நேரத்தில் அம்மா ‘நீ வாப்பா சாப்பிட பசியோட வந்திருப்பாய்’ என்று அழைத்து செல்லும்போது அது எனக்கு சூடான நெருப்பில் நீர் ஊற்றி அனைத்ததுபோல் மன அமைதி அடையும்.




 அதுதான் அம்மா. “தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து அதுதான் நம் வாழ்வின் அடித்தளம். அம்மா இல்லாமல் நாம் ஏது? அந்த அம்மா இருக்கும் போதே அந்த தாய்க்கு பணிவிடைச் செய்து நன்மையைப் பெற்றிடுவோம். தாய் போனபின் அழுவதனால் ஒரு பயனுமில்லை.


 அடுப்பங்கரை வேலை அவளுக்கு அலுப்பைத் தரவில்லை


ஓயாத வேலை


ஓய்வே இல்லை




ஒன்பது பேரைப் பெற்றாள்


ஒன்பது பேரும் உட்கார்ந்து உண்ண




அடுப்பங்கரை வேலை


அவளுக்கு அலுப்பைத் தரவில்லை


அவள் பெற்ற பிள்ளைகளுக்கும்


அவள் பெற்ற பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போட




அவள் பெற்ற பிள்ளைகளின் மகிழ்வே


அவளது மகிழ்வாய் இருந்தது




அம்மா என்றும்


அம்மம்மா என்றும்


அத்தம்மா என்றும்


அவர்கள் அழைக்கும் போது


அவளின் மனம் நெகிழ்ந்து விடும்




அவளின் கணவனோ


அவளின் மகிழ்வில்


அவனும் மகிழ்வான்


அவன் மனதிற்குள்


அவனையறியாது மனம் வருந்துவான்


அவனது துணைவி தொய்வில்லாது உழைப்பதைக் காண



நாம் பெருநாளை சேர்ந்து கொண்டாடுவோம் !




நாம் பெருநாளை சேர்ந்து கொண்டாடுவோம்


`அப்பா ரொம்ப  தொலைவில் வெளிநாட்டில் இருக்காரே நம்ம மேலே அன்பா இருந்து நம்மை நினைத்து பார்ப்பாரா அம்மா`


நிட்சயமாக நம்ம நினைவில்தான் இருப்பார்.


அப்பா இந்த பெருநாளுக்கு ஊருக்கு வரமாட்டாரா அம்மா !


நீ படிக்க பணம் வேணுமே! அதுக்குத்தான் உங்க அப்பா அங்கே தங்கி இருக்காங்க . இன்சாஅல்லாஹ் அடுத்த பெருநாளுக்கு நம்முடன் இருப்பார் . நீ நல்லா பெருநாள் கொண்டாடவேண்டும்  என்றுதான் நினைக்கிறார், அதனால்தான் அவர்  உனக்கு பணம்,சட்டை பாவாடை  எல்லாம் அனுப்பி இருக்கின்றார் .




பிள்ளைகளை, மனைவியை மற்றும் குடும்பத்தாரை பிரிந்து பணத்திற்காக வாழ வேண்டிய கொடுமை . குடும்பத்தாரை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் மக்களை  பார்பவர்களுக்கு மகிழ்வாக இருப்பொழுதுபோல்  இருக்கும் ஆனால் அவர்களின் மன வலி அவர்கள்தான் அறிவார்கள்.


.எல்லோருக்கும் எல்லாம் எப்பொழுதும் கிடைத்துவிடுமா !


எங்கிருந்தாலும் குடும்பத்தினை மறக்கமுடியுமா? நினைவைத்தான் பிரிக்கமுடியுமா? குடும்பத்தினை மறந்து வாழ்வில்  மகழ்ச்சி காண முடியுமா‌! குடும்பத்தினை பாதுகாக்க திரைகடல் ஓடியும் திரவியம்  தேட வேண்டிய நிலமை  என்ன செய்வது ! ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.

----------------------------------------------

 நாம் பெருநாளை சேர்ந்து கொண்டாடுவோம் !




நாம் பெருநாளை சேர்ந்து கொண்டாடுவோம்


`அப்பா ரொம்ப  தொலைவில் வெளிநாட்டில் இருக்காரே நம்ம மேலே அன்பா இருந்து நம்மை நினைத்து பார்ப்பாரா அம்மா`


நிட்சயமாக நம்ம நினைவில்தான் இருப்பார்.


அப்பா இந்த பெருநாளுக்கு ஊருக்கு வரமாட்டாரா அம்மா !


நீ படிக்க பணம் வேணுமே! அதுக்குத்தான் உங்க அப்பா அங்கே தங்கி இருக்காங்க . இன்சாஅல்லாஹ் அடுத்த பெருநாளுக்கு நம்முடன் இருப்பார் . நீ நல்லா பெருநாள் கொண்டாடவேண்டும்  என்றுதான் நினைக்கிறார், அதனால்தான் அவர்  உனக்கு பணம்,சட்டை பாவாடை  எல்லாம் அனுப்பி இருக்கின்றார் .




பிள்ளைகளை, மனைவியை மற்றும் குடும்பத்தாரை பிரிந்து பணத்திற்காக வாழ வேண்டிய கொடுமை . குடும்பத்தாரை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் மக்களை  பார்பவர்களுக்கு மகிழ்வாக இருப்பொழுதுபோல்  இருக்கும் ஆனால் அவர்களின் மன வலி அவர்கள்தான் அறிவார்கள்.


.எல்லோருக்கும் எல்லாம் எப்பொழுதும் கிடைத்துவிடுமா !


எங்கிருந்தாலும் குடும்பத்தினை மறக்கமுடியுமா? நினைவைத்தான் பிரிக்கமுடியுமா? குடும்பத்தினை மறந்து வாழ்வில்  மகழ்ச்சி காண முடியுமா‌! குடும்பத்தினை பாதுகாக்க திரைகடல் ஓடியும் திரவியம்  தேட வேண்டிய நிலமை  என்ன செய்வது ! ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.


------------------------------------------------


விடுமுறைக்கு  ஊர்  வந்த பின்...


'வயிறார சாப்பிட்டு வருசமாச்சு.'  இப்படி சிலர்.


வெளிநாடு சென்று ஊர் வந்தால் கல்யாண வீட்டு பிரியாணியை சாப்பிட மிக்க ஆர்வம் . என்னதான் வீட்டில் பிரியாணி சமைத்தாலும் பண்டாரி வைத்து பெரிய  செம்பு சட்டியில் ஆக்கிய பிரியாணியை சாபிடுவது மிகவும் சுவைதான்.


உண்பது வாழ்வதற்கு . வீட்டில் இருக்கும் பொழுது நமக்கு வகை வகையாய் சமைத்து கொடுக்க வீட்டில் மகளிர் அந்த வேலையில் ஈடுபடுவதால் நமது வேலை சாபிடுவது மட்டும்தான் . வீட்டை விட்டு பொருள் நாடி வெளிநாடு சென்ற பிறகு உணவு விடுதியில்  சாப்பிட முற்பட்டால் திரட்டிய பணமும் போய் உடலும் பாதித்துவிடும் . நாமே சமைத்து சாப்பிடும் பொழுது மன மகிழ்வும் உடல் நலமும் கிட்டுவதோடு பணமும் சேமிக்க முடியும் .


மனைவியுடன் “உணவில் உப்பில்லை!  அல்லது இவ்வளவு காரமா! ,உனக்கு உன் அம்மா சமைக்க கற்றுக் கொடுக்க வில்லையா! ” இப்படி ஏக தாளமாக இளக்காரமாக பேசினோம். அதற்கு அவள் “ஏன் நீங்கள் சமையுங்களேன்” என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை . நாமும் ” நான் சமைக்கிறேன் பார் ” என்று சொல்ல மனமும், தைரியமும் இல்லை . அப்படி நாம் சமைத்து கொடுப்பதுதான் அவளுக்கு கொடுக்கும் பெரிய தண்டனையாக அமைந்துவிடும் என்பது மனைவிக்கு தெரிந்திருப்பதால் அவள் “ஏன் நீங்கள் சமையுங்களேன்” என்று ஒரு நாள் கூடசொல்ல மாட்டாள்.





No comments:

Post a Comment