Sunday 9 May 2021

அல்லாஹ்! எங்களுக்கு உறுதியான ஈமானையும் .நேயமான பாக்கியத்தையும்.

 



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

அல்லாஹ்! எங்களுக்கு உறுதியான ஈமானையும் .நேயமான  பாக்கியத்தையும். கிருபையான பார்வையும்,  பரிபூரண அறிவையும், தெளிவான ஹிருதயத்தையும், நற்செயல்கள் புரிய நல்லுதவியையும், அழகிய பொறுமையையும், மகத்தான நற்கூலியையும், தியானம் செய்யும் நாவையும், கஷ்டங்களை சகித்திக் கொள்ளும்  உடலையும், நிரந்தரமான ஆகாரத்தையும், அமல்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரார்த்தனையும், எங்களுக்கு அருட்கொடையான பிர்தவ்ஸ் என்னும் சுவர்கத்தையும் தந்தருள்வாயாக !

மஹா கிருபையாளனே! உனது சலவாத்தும். பரக்கத்தும் எங்களின் தலைவரான முஹம்மது நபி (ஸ் ல்)அவர்களின் மீதும், அன்னாரின் உற்றார்  உறவினர்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக ! இன்னும் சகலவிதமான புகழும் சர்வ உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே உரித்தானது.

ஆமீன் 

No comments:

Post a Comment