Showing posts with label உயிர். Show all posts
Showing posts with label உயிர். Show all posts

Thursday, 13 March 2014

ஒன்றோடு ஒன்றை சேர்த்து வைத்தனர்

நான் உன்னை ஒன்றை நினைக்கச் சொல்கின்றேன்
நான் உன்னை நினைக்கச் சொல்வதனை நினைக்க மறுக்கிறாய்

நான் உன் உணர்வை தூண்டுகின்றேன்
நான் உன்னை தூண்டிய உணர்வு உன்னை நினைவிழக்கச் செய்கிறது

நீ என் வழி தொடர என் சொற்கள் பயனற்று போயின
நீ என் வழி தொடர என் செயல்கள் உயிர்பெற்று உறவாடின

வார்தைகள் வழியைச் சொல்லும்
செயல்கள் சேர்த்து வைக்கும்

சொற்களால் ஒன்றும் உருவாவதில்லை
செயல்களால் ஒன்று உருவாகின்றது

ஒன்றோடு ஒன்றை சேர்த்து வைத்தனர்
ஒன்றோடு ஒன்று சேர மற்றொன்று உருவானது

Sunday, 29 September 2013

ஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது


இரண்டு உயிர்கள்
இரண்டு உடல்
இரண்டு ஆன்மா
இரண்டும் இணைந்தது
இரண்டுக்கும் வந்தது ஒரு உயிர்
இரண்டின் கலவை ஒரு உருவம்
இரண்டுக்கும் மாறுபட்ட மனம்
இரண்டையும் அணைத்துப் போகும் மனமில்லை
இரண்டையும் வெற்றிக் கொள்ளும் குணமானது

தனக்கென தானே ஒரு வழி வகுத்துக் கொண்டது
தரணியில் தன்னை மிஞ்சுவாரில்லை என்ற இறுமாப்பு
தனித்து நின்று போராடி வெற்றி பெற வேட்கை கொண்டது
தன்னைத் தானே உருவாக்கும் வேட்கை
தனி மரம் தோப்பாகாது என்பதை மறந்து நின்றது
தன்னை யாரும் பார்க்கவில்லை என்ற ஏக்கம்
தான் அழிய தானே வழி வகுத்துக் கொண்டது
தான் அழிய மற்றவர் வாழ விரும்பவில்லை
தன்னை நோக்குவாரற்று சிதைந்துப் போனது

இருவர் சேர நாம் வந்தோம் என்பதை அறியாமல் போனது
ஆணவம் அழிவுக்கு வழி வகுத்தது
ஆணவம் அறிவை மறைத்தது
ஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது

Friday, 27 September 2013

உயிர் பெற்ற பல சொற்கள் கவிதையாகி உயர்வு பெற்றது



உயிர் போகும் இடம் அறியேன்
உடல் போகும் இடம் அறியேன்
உயிர் போகும் என்பதை அறிவேன்

உயிரை கொடுத்ததும் உயிரை போக்குவதும் இறைவஉயிர்ன் தான்
உயிரை கொடுத்து உயிரை நிறுத்தி வைப்பதும் இறைவன் தான்

உயிர் இருக்க உயிரை உயர்வாக்க  இறைவனை தொழுகச் செய்கிறேன்
உயிர் இல்லாத  உடலை உணர்வற்று போகச் செய்தவனும் இறைவன்
உயிர் இல்லாத  ஓர் எழுத்து உயிர் பெற்றது ஒரு சொல்லால்
உயிர் பெற்ற பல சொற்கள் கவிதையாகி உயர்வு பெற்றது


"உடல்தான் உயிரென்றாச்சு,
அதற்கு உலக்கை என்பதே மூச்சு,
நல்ல நடப்பெனும் நெல்லைப் பாய்ச்சு,
தெய்வ நாட்டத்தையே உருவாக்கு

வாசிஹாஹா சரமாத்தி குத்தடி ஹூஹூ
திக்கிர் முழக்கிக் குத்தடி ஹீஹீ"

-ஞானக்கவி ஹக்கீம் அய்யூபு அவர்கள்
 பெரிய ஞானப்பாடல் இது,வாசி என்பது மூச்சுப் பயிற்சியின் சூத்திரம்.ஹாவென்று தூக்கி நீட்டு,அல்லாஹூ வென்று சரம் ஓட்டு என்று மூச்சுப்பயிற்சியின் மூலம் இறையண்மையைப் பெறுவதற்கான தவயோகமே இப்பயிற்சி-Nisha Mansur

ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)- குர்ஆன்
மக்கீ, வசனங்கள்: 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎


Wednesday, 21 August 2013

தவறு என்று அறிந்தும் தவறு செய்கிறோம்

உயிரற்ற ஊர்தியால் உயிரோடு உள்ள ஒருவர் மோதிச் சென்றதால்
உயிரோடு போராடிக் கொண்டிருந்தது ஓர் உடல்

உயிரோடு போராடிக் கொண்டிருந்தவரை பார்த்தவர் பலர்
உயிரோடு பார்த்தவர் பார்த்தும் பாராமல் போனார்

உதவ உள்ளம் இருக்க
உதவ முற்பட உயிர் பிரிந்தால்
உதவியதால் தொல்லைகள் வரும்
தொடர்ந்து நீதிமன்றம் வரச் சொல்லி தொல்லை கொடுப்பார்
தொடரும் என் பயணம் தடைபடும் நீதி மன்றத்தால்
தாமதமாகும் தீர்ப்புக்கு தொடர் பயணம் தொல்லை தரும்
தாமதமாகும் தீர்ப்பில் நீதி மறுக்கப்படும்
"Justice delayed is justice denied" is a legal maxim
தவறு என்று அறிந்தும் தவறு செய்கிறோம்

Monday, 10 June 2013

யார் அந்த வீரன் !

உன் தந்தை சொல் கேட்டு மதி கெட்டேன்
உன் தந்தைக்கு உணர்ச்சி கொப்பளிக்கும்
உன் தந்தைக்கு உணர்ச்சியை அடக்கும் மனமில்லை
உன் தந்தைக்கு செயல் வேண்டும்
உன் தந்தைக்கு செயலின் விளைவின் அருமை விளங்கவில்லை
உன் தந்தை சொல் கேட்டு அத்தனை தடை போட்டேன் நீ வராமலிருக்க
நம் இறைவன் அத்தனை தடையும் உனக்கு எளிதாக்கி உடைக்க வழி செய்தான்
உன் ஆற்றலால் உட்புகுந்தாய்
உட் புகுந்த உனை உயிராக உருவாக்கினேன்
உன் நேரம் வந்து உலகில் உயர்வாக  உயிர் பெற்றாய்
உனைக் கண்டு உளம் மகிழ்ந்து உயர்வாய் உனைப் போற்றுகிறார்
வேண்டாம் என்றவனை விரும்பி விரும்பி கொஞ்சுகின்றார் உன் தந்தை
வீரனாய் உட்புகுந்து வீரனாய் வெளிவந்து விரும்பியனாய் வந்தவன் நீ
எல்லா வகையிலும் என் மனதில் ஏற்றம் பெற்றாய்!
நீ தானடா உண்மையான வீரன் என் அருட் செல்வமே !

 -------------------------------------------------------------------------------------------
தமிழில் தர்ஜமதுல் குர்ஆனை முதன் முதலில் மொழி பெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ,சிராஜுல் மில்லத் ஆ.கா.அ . அப்துஸ் சமது அவர்களின் தந்தை ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி. அவர்களிடம் ஒருவர் சென்று கர்பத்தடையைப் பற்றி தங்களது கருத்து என்ன என்று கேட்டாராம். அதற்கு மதிப்புக்குரிய பாகவி அவர்கள் "இந்த கேள்வியை உன் தகப்பனார் கேட்டிருக்க வேணும் என்று சொன்னார்களாம்" . இதன் பொருள் உன் தந்தை கர்பத்தடையை செய்திருந்தால் இந்த கேள்வி கேட்க இந்த உலகத்திற்கே நீ வந்திருக்க மாட்டாய் என்பதுதான் . யோசனை செய்யுங்கள். நம் தகப்பனாரும் இதை செய்திருந்தால் நாமும் வந்திருக்க மாட்டோம்

Saturday, 23 March 2013

என் உயிரில் விளையாட யார் வருவாரோ!

உலவி வர சிறிய இடம்
உலவும் போது இடிப்பதில்லை
உன்னைக் கண்டு நான் மகிழ
உணவைத் தேடி நீ அலைய
உயிர் வாழ உணவு கொடுப்பேன் 
உயிர் வாழ நீர் மாற்றம் செய்வேன்
நிறம் நிறமாய் வாரிசு கொடுத்தாய்
வாரிசு உன்னை வளம் வரும்
வேதனை அறியா உள்ளம் பெற்றாய்
பெற்றது அறியா உள்ளம் கொண்டது
நான் என் மகிழ்வை அடைய
நான் கண்ணாடிப் பேழையில் விட்டு வைத்தேன்
நான் அறியேன் அதுவே உனக்கு கடுஞ்சிறையென
உன் உயிரில் நான் விளையாட
என் உயிரில் விளையாட யார் வருவாரோ!