Showing posts with label அறிவு. Show all posts
Showing posts with label அறிவு. Show all posts

Friday, 30 May 2014

ஒற்றுமை வேண்டுமென ஓயாது சொற்பொழிவு

ஒற்றுமை வேண்டுமென ஓயாது சொற்பொழிவு செய்வார்
ஒற்றுமையற்ற மனம் கொண்டிருப்பார் தன் நிலை வெளியே தெரியா வண்ணம்

தங்களுக்குள் தானே முற்றும் அறிந்தவன்
தங்களோடு இருப்போர் தன்னை விட குறைந்த அறிவு பெற்றவர் என்ற அகம்பாவம்

ஒத்த அறிவு பெற்றோர் ஒருபோதும் ஒத்துப் போவதில்லை
அறிவின் அகம்பாவம் அவர்களை ஆட்டி வைக்கின்றது

Monday, 2 December 2013

அறிவைத் தேடு ஆண்டவனை அறிய

ஆண்டவனை அறிந்தால் ஆண்டவன் காட்டிய வழி நடப்பாய்
ஆண்டவன் காட்டிய வழி நடந்தால் வாழ்வின் மகத்துவம் அறிவாய்

வாழ்வின் மகத்துவம் அறிந்தால் வாழ்வை உயர்வாக்கிக் கொள்வாய்
வாழ்வை உயர்வாக்கிக் கொண்டால் வாழும் வாழ்வு சிறப்பாகி விடும்

வாழ்ந்த வாழ்வு சிறப்பானால் இறைவனது நேசம் கிடைக்கும்
இறைவனது நேசம் கிடைத்தால் சுவனத்தின் வழி கிடைக்கும்

சுவனத்தின் வழி கிடைத்தால் வாழ்ந்த வாழ்வு பரிபூரணமாகிவிடும்
வாழ்ந்த வாழ்வு பரிபூரணமாக்கிவிட்டால் இறைவன் தந்த வாழ்வு நிறைவாகிவிடும்

இறைவன் தந்த வாழ்வை நிறைவாக்கிவிட்டால் இறைவனை அறிந்தவன் ஆனாய்

Sunday, 29 September 2013

ஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது


இரண்டு உயிர்கள்
இரண்டு உடல்
இரண்டு ஆன்மா
இரண்டும் இணைந்தது
இரண்டுக்கும் வந்தது ஒரு உயிர்
இரண்டின் கலவை ஒரு உருவம்
இரண்டுக்கும் மாறுபட்ட மனம்
இரண்டையும் அணைத்துப் போகும் மனமில்லை
இரண்டையும் வெற்றிக் கொள்ளும் குணமானது

தனக்கென தானே ஒரு வழி வகுத்துக் கொண்டது
தரணியில் தன்னை மிஞ்சுவாரில்லை என்ற இறுமாப்பு
தனித்து நின்று போராடி வெற்றி பெற வேட்கை கொண்டது
தன்னைத் தானே உருவாக்கும் வேட்கை
தனி மரம் தோப்பாகாது என்பதை மறந்து நின்றது
தன்னை யாரும் பார்க்கவில்லை என்ற ஏக்கம்
தான் அழிய தானே வழி வகுத்துக் கொண்டது
தான் அழிய மற்றவர் வாழ விரும்பவில்லை
தன்னை நோக்குவாரற்று சிதைந்துப் போனது

இருவர் சேர நாம் வந்தோம் என்பதை அறியாமல் போனது
ஆணவம் அழிவுக்கு வழி வகுத்தது
ஆணவம் அறிவை மறைத்தது
ஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது

Sunday, 30 June 2013

பெண்சாதி பன்மையாக இருக்க முடியாது

போட்டி போட்டு முன்னேறு
போட்டி போடவேண்டியதில் போட்டி போடு
போட்டிக்காக போட்டி வேண்டாம்
போட்டி போடுவதில் குறிக்கோள் வேண்டும்
போட்டி போடுவது திறமையை வளர்த்துக் கொள்ள
போட்டி போட்டு பரிசுகளை அள்ளிக் கொள்ள
போட்டி போடுவது பெருமையை நாடி அல்ல
போட்டியில் வெற்றி கொண்டால் கர்வம் கொள்ளாதே
போட்டி போடுவது மற்றவரை வீழ்த்த அல்ல
போட்டி போடுவது நாம் வெற்றி அடைய
போட்டியின் வெற்றி நிலையானதல்ல

போட்டியில் தோற்றால் துவண்டு விடாதே
போட்டியில் வேகமும் விவேகமும் வேண்டும்
போட்டியில் வெற்றி கொள்ள வெறி வேண்டாம்
போட்டியில் அச்சம் அடைய  வேண்டாம்
போட்டியின் அனுபவம்  நம் நிலை அறிய வைக்கும்
போட்டியின் தோல்வி ஆளுமைக்கு வழிகாட்டி
போட்டியின் தோல்வி மனோபலத்தின் எடைக் கல்

பேச்சுப் போட்டியின் முடிவு தர்க்கத்தின் வெற்றி அல்ல
பேச்சுப் போட்டியின் முடிவு விவாதத்தின் விளக்கம்
பேச்சுப் போட்டி வெற்றி கொண்டாட அல்ல
பேச்சுப் போட்டியின் வென்றதால் இறுமாப்பு வேண்டாம்
பேச்சுப் போட்டியில் அனைவர் பங்கும் அதில் அடங்கும்
பேச்சுப் போட்டியில் அனைத்துக் கருத்தும் உடன்பாடாகிவிட முடியாது

அறிவுக்கான போட்டி நம் அறிவை வளர்க்கும்
விளையாட்டுக்கான போட்டி நம் உடல்நலத்தை வளர்க்கும்
மூளை பயிற்சி அறிவை வளர்க்கும்
உடற்பயிற்சி உடல்நலத்தை வளர்க்கும்
பணத்தை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை வீழ்த்தும் குறிக்கோள் வேண்டாம்
நன்மை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை சேர்த்துக் கொள்
இறைவணக்கத்தில் போட்டி இல்லை இறைவணக்கத்தில்  ஈடுபாடு வேண்டும்

Tuesday, 21 May 2013

உங்கள் சரிதம் சொல்லுங்களேன்.

நிறைய மரங்கள் ஆனால் அனைத்திலும்   பழமில்லை
நிறைய பழங்கள் ஆனால் அனைத்தும் உண்பதற்கு உகந்ததில்லை
நிறைய மனிதர்கள் ஆனால் அனைவரும் அறிவு பெற்றிருக்கவில்லை
நிறைய அறிவு பெற்ற மனிதர்கள் ஆனால் அவர்கள் அறிவு அடுத்தவர்களுக்கு பயனளிப்பதில்லை
உண்ண உகந்த பழம் ,உயர்ந்த பகிர்ந்தளிக்கப்பட்ட அறிவு உயர்ந்தது

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
- குர்ஆன் -3:190.

உங்கள் சரிதம் சொல்லுங்களேன் . எங்கு, எதுவரை, எதில் ஆர்வம் கவிதை எழுத உந்தப்பட்டது . இவையெல்லாம் சுய விளம்பரமோ, சுய விமர்சனமோ, சுயசரிதை என்று தயக்கம் வேண்டாம் .சொல்வதை அழகுபட சொல்வதில் உங்களுக்கும் மகிழ்வு. அடுத்தவருக்கும் ஒரு தூண்டுதல் .உங்கள் அறிவு பரவலாக்கப் படவேண்டும் . நீங்கள் ஒரு சிறந்த மார்க்கப்பற்றுள்ள குணம்முள்ள எழுத்தாளர்,கவிஞர் ,அனைத்துக்கும் மேல் அனைவராலும் நேசிக்கப் படுபவர் .இறைவன் கொடுத்த அறிவை பகிர்ந்திடுங்கள் .'உங்களில் 'உயர்ந்தோர் தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைப்பவரே' - நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)."
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். புகாரி ஹதீஸ்


Thursday, 9 May 2013

கல்வி பெறுவது தன்னை தெரிவதற்கு தன்னை அழிப்பதற்கு அல்ல.

தற்கொலை செய்பவர் தற்குறி.
கல்வி பெறுவது தன்னை தெரிவதற்கு தன்னை அழிப்பதற்கு அல்ல.
கல்வி கற்பது மற்றவரை மதிப்பதற்கு மற்றவரை வருத்துவதற்கு அல்ல .
பாடசாலை சென்று படிப்பது பகுத்தறிவைப் பெறுவதற்கு பரதேசி ஆவதற்கு அல்ல
பாடசாலை தரும் சான்ரிதழ் வாழ்க்கையில் தகுதி பெற்றதற்காக அல்ல
கல்விக்கு கொடுக்கும் மதிப்பெண் அடுத்த அடி வைத்து நகர அது தன்னை அழித்துக் கொள்வதற்கு அல்ல .
----------------------------------------
கல்லூரியில் படிக்கும்போது சில கேள்விகளை ,பாடங்களை தேர்வுக்கு வரக் கூடியது என முக்கியப் படுத்தி சொல்வார்கள். தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள் .அவர்கள் படித்தது ஏதும் தேர்வில் கேட்டிருக்க மாட்டார்கள். தேர்வு எழுதியதில் திணறல். அதனால் மதிபெண்கள் குறைந்துவிடுகிறது . படித்தது தேர்வில் விடை எழுதத்தான் என்ற நிலையாகி கற்பதின் அடிப்படை கொள்கையே அடிபட்டுப் போகும் நிலை உருவாகிறது.

அறிவு ,ஞானம், திறமை மற்றவை அனைத்தும் அறிந்து ,தெரிந்து. திறிந்து அடிபட்டு அனுபவப்பட்டு வருவதில்தான் சிறப்பாக அமையும்.
-----------------------------------------

Tuesday, 30 April 2013

ஒரு தவறு ஒட்டு மொத்த தவறு ஆகிவிடாது.


  தாய்மை என்பது இயற்கை . தாய்மை எப்படி இருப்பது சிறப்பு ? அறிவும் தாய்மையும் ஒன்று சேர்த்தல்  வேண்டும் .
அம்மாவுடன் ஒன்று கலந்தது தாய்மை .அம்மா பாசம் காட்டுவாள்.தன் குழந்தை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள். தாய்மையை விட சிறந்தது எதுவுமே இல்லை. தன பிள்ளை சிறந்து விளங்க ஆசைப்படுவாள் .இதற்கு அடிப்படை தாய் கல்வி கற்றவளாய் இருப்பது இன்றியமையாதாகும் . அம்மாவிடம் அறிவின் முதிர்ச்சி இல்லையெனில் அவள் வளர்க்கும் குழந்தையின் அறிவின் வளர்ச்சிலும் முழுமை  இல்லாமல் போகும் .அறிவின் ஆற்றல் இல்லாத தாய், கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தால்  நாட்டின் வளர்ச்சி குன்றிவிடும் . தந்தை பொருள் ஈட்ட வீடு விட்டு நீங்கி நிற்கும் நிலையில்  தாய்தான் தன பிள்ளைகளிடம் அதிக நேரம் இருக்கும் நிலை .அறிவு பெற்ற குழந்தையாக மாற்றும் பொறுப்பு அவளிடமே உள்ள நிலையில் அந்த தாய்மை கொண்ட அம்மாவுக்கு அறிவும் கல்வியும் அவசியம் .பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று. சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய் பாசம் காட்டுவதோடு நில்லாமல் தனது பிள்ளைகள் சிறந்த அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அந்த தாய் பெற்றிருக்கும் கல்விதான் அஸ்திவாரம்,அடித்தளம் .

Monday, 1 April 2013

நன்மையை ஏவு தீமையைத் தடு

சமூகச் சீர்திருத்தத்தை செய்
கடமை காத்திருக்க நழுவுவதேன்
பணி  செய்வதே நம் கடமை
செயலின் எல்லையை விரிவாக்கிக் கொள்
சேவையின் சொல்லை   நயமாக்கிக் கொள்
நோக்கம் நன்மையாகி சேவை விரியட்டும்
தனி மரம் தோப்பாகாது
தனி  மனிதன் சமூகமாக முடியாது
நாம் நிம்மதியடைய சமூகம் வேண்டும்
சமூகத்தின் நிம்மதியில் நமக்கும் பங்குண்டு
சமூகம் நமக்கு என்ன செய்தது என நினையாமல்
சமூகத்திர்க்கு நாம் அளித்த பங்கென்ன நினைத்தல் உயர்வு
சமூகத்தில்  நம் சேவையும் தேவை
சிறு துளி பெரு வெள்ளமாகும்
நாமும் அதில் ஒரு துளி

தடுக்கி விடும் கல்லை ஓரத்தில் நகர்த்துவதும்
தடுக்கி விடும் கல்லை போடவருபவரை நிறுத்துவதும்
தர்மச் சேவையில் அடங்கும்
ஆரம்பம் நம்மிடத்தில் தொடரட்டும்
மேன்மை பெரிதாக பரவட்டும்
சொலவதை சொல்
செய்வதை சொல்
சொல்வதும் செய்வதும் நன்மை பயக்கட்டும்