Showing posts with label கண்கள். Show all posts
Showing posts with label கண்கள். Show all posts

Monday, 14 October 2013

கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்


அலைபாயும் கண்கள் ஆண்கள் கண்கள்
கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்

ஆண்களை அறிய அவர்கள் செயலைப் பார்
பெண்களை அறிய அவர்கள் கண்களைப் பார்

பெண்களின் இதயம் ஓர் ஆழ் கடல்
ஆழ் கடலில் மூழ்கி முத்தைப் பெறு

பெண்களின் உள்ளம் அறிய கண்களை உற்று கவணி
பெண்களின் உள்ளம் கண்களில் ஒளிந்து உள்ளது

ஆண்களின் கோபம் இடியோடு வரும் மழை
பெண்களின் கோபம் இடியற்று கொட்டும் அருவி

ஆண்களின் நட்பு காரியம் நாடி நிற்கும்
பெண்களின் நட்பு மனதை நாடி நிற்கும்

ஆண் சேர்த்து மனைவியிடம் கொடுப்பான்
பெண் சேர்த்து தாயிடம் கொடுப்பாள்

Tuesday, 10 September 2013

நெஞ்சம் நினைத்ததை கண்கள் பேசும்

உடலில் சோர்வு
குருதியில் மாற்றம்
பார்வையில் தடுமாற்றம்
செயலில் வெறுப்பு

மனதில் நம்பிக்கை
கண்களில் நெடு நோக்கு
செயலில் ஈடுபாடு
விடியலில் வெற்றி

வாழ்க்கை நம்பிக்கை
நம்பிக்கை மனதின் ஈடுபாடு
ஈடுபாடு இதயத்தின் வெளிப்பாடு
வெளிப்பாடு ஈர்ப்பின் சக்தி

கண்கள் காட்டிக் கொடுக்கும்
கண்கள் கண்டதை நெஞ்சம் நினைக்கும்
நெஞ்சம் நினைத்ததை கண்கள் பேசும்
பேசும் வார்த்தைகள் மனதின் மாண்பு

Monday, 2 September 2013

பாச இழைகளின் பரிமாற்றங்கள்

அம்மாவின் மகிழ்வான தகவல்
மகனே உனக்கோர் குழந்தை
மகனே உன்னைப்போல் அக் குழந்தை
நான் பாட்டி யானதால் பெருமை கொள்கிறேன்
தாயும் சேயும் நலம் .
நீல நிறக் கண்ணோடு குழந்தை
கண் கொள்ளா காட்சி தருகிறது
பிறக்கும் குழந்தைகள் அனைத்தும்
நீல நிறக் கண்ணோடுதான் பிறக்குமாம்
நீல நிறக் கண் நீடித்தால் நான் மகிழ்வேன்
நீலமோ .பழுப்போ கருப்போ குழந்தை நலமே பெரிது
--------------------------------------------