Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Monday, 7 July 2014

அறிய நம்பிக்கை வேண்டும் உண்மையை இறைவனே அறிவான்

உங்களைப் பற்றி உண்மையானது
உங்களைப் பற்றி உண்மையானதை எழுதுங்கள்
உங்களைப் பற்றி உண்மையானதை எழுத உயர்வீர்கள்

உங்களைப் பற்றி உண்மையானதை அடுத்தவர் எழுதுவது முடியாது
உங்களைப் பற்றி அடுத்தவர் எழுதுவது
உயர்வானது மட்டும் இருக்கும் அல்லது பொய்யானது கலந்து இருக்கும்
உங்களை உயவாக்க அது உதவாது
-------------------------------
இறைவனை நம்பு
இறைவனை நம்பினால்தான்
நம்பிக்கை மீது
நம்பிக்கை உள்ளவனாகிறாய்
இறைவன் அறிவான்
இறைவன் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையை

மனிதனிடமும் நம்பிக்கையுடையவனாக நடந்துக் கொள்
மனிதர்களில் சிலர் நம் செயலின் மீது நம்பிக்கை பெறவில்லையெனில்
மனிதர்களில் சிலர் பெறாத நம்பிக்கையைப் பற்றி வருத்தப் பட்டு சோர்ந்து விடாதே
மனிதனாய் நம்மை படைத்த இறைவன் மீது நாம் நம்பிக்கை பெற முயல்வதே நம் வாழ்வின் உயர்வு

Wednesday, 25 June 2014

முதிர்ந்து உதிர்ந்த இடத்தில் இன்னொன்று உருவாகும்

முயற்சித்தேன்
முயற்சித்தது முடியவில்லை
முயற்சித்தது முடியாததால் முடங்கிப் போனேன்

முடங்கியதைக் கண்ட முதியவர்
முடங்கியதால் மூடனாகிவிடுவாய்
முடங்கியதால் ஒன்றும் அழிவதில்லை
முடங்கியவருக்கும் ஒன்று உயர்வாய் உள்ளது
முதிர்ச்சி பெற்று முயற்சி செய்
முடியும் யென்பதை மனதில் கொள்
முடியக் கூடியது முடிய நேரம் வர முடியும்
முற்சிப்பதே உன் கடமை
முடிக்க வேண்டியது இறைவன் வசமுள்ளது
முடிந்த வரை முயற்சி செய்
மற்றதை இறைவன் நாட்டப் படி நடக்கும்
நம்பிக்கையில் வாழ்வு வளம் பெறுமென்றார்

மையை கொட்டிய காரிருள்



மையை கொட்டிய காரிருள்
மின்னும் நட்சத்திரங்களின்
மின்மினிப் பூசசிகளின்
ஒளிச் சிதறல்கள் போல்

இருண்ட இதயத்தில்
அவ்வப்போது நம்பிக்கையின் ஊக்கங்கள்
வாழ்கையின் பிடிப்பை உறுதியாக்கின

Monday, 28 April 2014

அவளை மணமுடிக்க நினைத்தேன்! அவள் மற்றவனுக்கு மணமுடிக்கப் பட்டாள்!

நம்பிக்கை வாழ்வின் பிடிப்பு
நம்பிக்கைக்கு ஆதாயம் தேடி அலைவதும்
நம்பிக்கைக்கு ஆதாரம் தேடி அலைவதும்
நம்பிக்கையின் பிடிப்பை போக்கும்

நம்பிக்கை பெறுதல் மகிழ்வானது
நம்பிக்கை பெற்று பலன் அடைதல் வேண்டும்
நம்பிக்கை பெற்றோருக்கே மார்க்கம்
நம்பிக்கை அற்றோர்க்கு மார்க்கமில்லை

நினைத்ததெல்லாம் நடப்பதில்லை
நடக்காதென்ற நினைவோடு முயற்சிப்பதில்லை
முடிக்க நினைத்தது ஒன்று
முடிந்தது நினைக்காத ஒன்று

அவளை மணமுடிக்க நினைத்தேன்
அவள் மற்றவனுக்கு மணமுடிக்கப் பட்டாள்
திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுதல் என்பது
திருமண வாழ்வின் உயர்வு நிலையாலல்ல
திருமண வாழ்வில் வந்து சேர்ந்தவரால்

Monday, 21 April 2014

அனைத்தும் நம் செயலால் வந்த வினை

நேற்று முடிந்தது
முடிந்தது முடிந்ததுதான
வருவது நிச்சயமில்லை

நடப்பது நிகழ்வது
நடப்பது நினைவோடு நகர்வது
நிகழ்வதை மகிழ்வோடு நகர்த்துவோம்

நேற்று நடந்தவை நல்லதும் அல்லதும் கலந்த கலவை
நேற்று நடந்த நல்ல நிகழ்வை நினைத்து மகிழ்வோம்
நேற்று நடந்த கெட்ட நிகழ்வை வைத்து பாடம் பயில்வோம்

Tuesday, 18 March 2014

இறைவனை இறைஞ்சு இன்ஷா அல்லாஹ் இனியவை நிகழும்

எல்லா நிலைகளிலும் இன்னிலையில் இருக்கப் போவதாக நினைக்கிறாய்
இல்லா நிலையிலிருந்து இன்னிலைக்கு உருவாக்கியவனை நினைக்க மறந்தாய்

எவ்வழியில் போவதென்றும் அறிந்தவனாய் இல்லை
எவ்வழியிலிருந்து வந்தவனென்று அறிந்தவனாய் இல்லை

உயிர்பெற்று விழும்போது கதறினாய்
உயிரற்று விழும்போது கதறுவார்கள்

உயிரோடு விழும்போது தாங்கிப் பிடித்தது பூமி
உயிரற்று விழும்போது விழுங்க வைத்து மூடி விடுவர் பூமியில்

ஆத்மா நிலையிலிருந்து ஆன்மா நிலைக்கு மாறினாய்
ஆன்மா நிலையில் உனை உயர்வாக்கிக் கொள்ள
ஆத்மா நிலையில் உயர் நிலையில் வாழ்ந்து விடு
ஆன்மாவும் ஆத்மாவும் இறைவன் அருள் பெற உயர்வாகி விடும்

Monday, 10 February 2014

நம்பிக்கை தனியொரு மனிதனின் உரிமை .

இறைவன் ஒருவருக்கு ஒரு வழி காட்ட
அவர் தனக்கென அவவழியை தொடர்கிறார்
நம்பிக்கை தனியொரு மனிதனின் உரிமை .

ஒரு உயர்வழியை
ஒருவர் பின்பற்ற
மற்றவர் அவரை அல்லது
அவர் பின்பற்றிய வழியை திட்டினால்

Monday, 20 January 2014

அளவுக்கு அதிகமான நம்பிக்கை !



நம்பிக்கை நன்மைகள் தரலாம்

சில நேரங்களில் அதீத நம்பிக்கை பயன்தரலாம்.

அதீத நம்பிக்கையால் வாழ்க்கையை தீவிரமாக்கிக் கொண்டு வாழ்வைப் பற்றியே  தேவையில்லாமல் சிந்தனையால் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வதும் உண்டு .

வாழ்க்கையை லட்சியமற்றதாக பொருபற்றதாக்கிக் கொண்டு பல இழப்புகளையும் அடைவதும் உண்டு

தன்னைப் பற்றி நினைக்காமல்,தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்! என்பதே சிலரது நினைப்பில் இருந்துக் கொண்டே இருக்கும். இதனால் செயல்கள் நடைபெறாமல் போகலாம்.

Friday, 3 January 2014

புன்னகை


நான் அறிவேன் உன் நிலையை
உன் துயரமும் உன்னை வாட்டுகிறது
உன் நம்பிக்கையும் உன்னை விட்டு நகர்கின்றது
அத்துடன் உன்னால் மகிழ்வாய்
மற்றவரைக் கண்டால் புன்னகை பூக்க முடிகின்றது
அதுவே உனது பலமாக உள்ளது
அதனைக் கண்டு நான் அதிசயிக்கின்றேன்
அந்த இயல்பான புன்னகை என்னிடம் இல்லையே
அந்த இயல்பான புன்னகை என்னிடம் இல்லாததினால்
நான் வாழும் வாழ்வு ஒளி தராத வாழ்வானதோ !

Tuesday, 10 September 2013

நெஞ்சம் நினைத்ததை கண்கள் பேசும்

உடலில் சோர்வு
குருதியில் மாற்றம்
பார்வையில் தடுமாற்றம்
செயலில் வெறுப்பு

மனதில் நம்பிக்கை
கண்களில் நெடு நோக்கு
செயலில் ஈடுபாடு
விடியலில் வெற்றி

வாழ்க்கை நம்பிக்கை
நம்பிக்கை மனதின் ஈடுபாடு
ஈடுபாடு இதயத்தின் வெளிப்பாடு
வெளிப்பாடு ஈர்ப்பின் சக்தி

கண்கள் காட்டிக் கொடுக்கும்
கண்கள் கண்டதை நெஞ்சம் நினைக்கும்
நெஞ்சம் நினைத்ததை கண்கள் பேசும்
பேசும் வார்த்தைகள் மனதின் மாண்பு

Wednesday, 14 August 2013

நம்பிக்கையும் சுதந்திரமும்

உன் போக்குக்கு விட்டால் நீ கெட்டு விடுவாய் – அப்பா

உன் போக்குக்கு விட்டால் நீ அனைத்தையும் அழித்து விடுவாய். நீ ஒரு எல்லைக்குள் தான் மேய வேண்டும் அதனால் ஒரு நீண்ட கயிறு போட்டு ஒரு மரத்தில் கட்டி விடுகிறேன். எல்லையை மீறினால் உன்னை அந்த கயிறு கட்டுபடுத்தும் – மாட்டுக்கு உரிமையாளர்

சட்டம் ஒன்று உள்ளது அதன்படிதான் நீ செயல்பட வேண்டும். மீறினால் உன் தவறுக்கு தகுந்ததுபோல் உனக்கு தண்டனை கிடைக்கும். சட்டம் தெரியாது என்று சொல்லி தப்பிப்பதற்கு உனக்கு உரிமை கிடையாது – அரசு வகுத்த சட்டம்

Tuesday, 30 July 2013

இறைவன் மீது நம்பிக்கை நிலையாக நிற்கட்டும்.

நடக்குமென்று நினைத்தது நடக்கவில்லை
நம்பிக்கை வைத்து செயல்படவில்ல

நம்பிக்கை என்மீதுமில்லை
நம்பிக்கை இறைவன் மீதுமில்லை

நடக்காமல் போனதும் நன்மையானது
நடக்காததற்கு நானே காரணம் என மனம் சொன்னது

நடந்தாலும் நல்லது ,நடக்காவிட்டாலும் நல்லது
நடப்பது நடக்காது அனைத்தையும் இறைவன் நன்மையாக்கினான்

இறைவன் மீது நம்பிக்கையை வைக்காமல் போனது பாவமானது
இறைவன் மீது வைத்த நம்பிக்கை உந்துதல் சக்தியை தந்து உயர்வானது

பாசம் பரவலானது செயல் விசாலமானது
பாசத்துடன் செய்வது அனைத்தும் இறைவனுக்கானது
நாயகம் கொண்ட நம்பிக்கை இறைவன்மீது

Friday, 17 May 2013

உன்னுடன் வருவது யார் ?

பிறப்பு உறுதி இல்லை. இறப்பு உறுதி. இறப்பு இறுதியாவதுமில்லை

இறப்புதான் பிறப்பின் தொடக்கம். வாழ்ந்த வாழ்வின் பதிவேட்டுகளின்  பிரதிபலிப்பு இடமாற்றமான புதிய இடத்தின் பிறப்பில் உரிய பலனைத் தரும்.

மரணம் என்று ஒன்று உண்டு என நாம் அறிந்தும் அதனை மறந்து செயல்படுகின்றோம்.

மரணம் வரும்போது மரணத்தின் பயம் வருகின்றது .அது இந்த அனுபவித்த வாழ்வு நம்மை விட்டு அகலுகின்றதே என்பதனால். மரணம் ஒரு முடிவாகி விடாமல் அது  புதிய இடத்தில்  பிறந்து பயணம் தொடர்கின்றது என்ற நம்பிக்கை வருவதில்லை.அந்த நம்பிக்கை வரும்போது கிடைத்த இந்த வாழ்வை பிறக்கப் போகும் இடத்திற்கு தகுந்தது போல் இந்த வாழ்வை முறைப் படுத்திக் கொள்வோம். இதுவே இறுதியென்று நினைக்க மாட்டோம் .

   இறுதி  வரை என்ற வார்த்தை பல காரணங்களுக்காக பயன்படுத்தப் பட்டாலும் இறப்புதான் இறுதி என்று நாம் எண்ணுகின்றோம். இதய‌ம் துடி‌க்கவில்லை, செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போனது ‌‌அதனால் மரண‌‌ம். அந்த இறப்பும்,மரணமும் இறுதி இல்லை என நம்புவதும் உண்டு. மறுலோகம் என்பர் மார்க்கம் பேசுபவர் .அதை நம்பாதவர் இயற்கை என்பர் .

மடிதல் என்று கிடையாது உரு மாறுகின்றது. இலை விழுந்தால் எரு. 

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35

 உன்னுடன் வருவது யார் ?


மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள். 

    1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

Saturday, 27 April 2013

எத்தனை வகை குழைவுகள்!

 பறவைகள் பல நாட்களுக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைப்பதில்லை. அன்றாடம்   அதற்கு தேவையான உணவுகளை அது நாடி செல்கின்றது. அதற்கு தேவையான உணவும் அதற்கு கிடைத்து விடுகின்றது . மனிதர்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை கிடையாது . தேவைக்கு மேல் சேர்த்து வீணே விரயம் செய்கிறான். தேவைக்கு அதிகமாக சேர்க்க  முயல்கின்றான் அதற்காக  பலவிதமான வழிகளையும் கையாளுகின்றான். அதில் ஒரு வகை காக்கா பிடிக்கும் முறை. காரியம் நடக்க  எத்தனை  வகை குழைவுகளும் காக்கா பிடிக்கும் விதமும் காண்கின்றோம்


 நாம் நினைப்பது காக்கை என்றால் கருப்பாக மட்டும் இருக்குமென்று .வெள்ளை  காக்கை பல நாடுகளில்  உண்டு. நம் நாட்டில்அபூர்வமாக, சில காக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.  .காம்பியாவில் கருப்பு   காக்கைகள் கிடையாது .எல்லாம் வெள்ளை காக்கைகள்தான். ஆனால் அந்த நாட்டு மக்கள் கருப்பு (நிறம் உடையவர்கள்) இனத்தவர்.
கருத்த நிறம் ஆனால் வெள்ளை மனது .அமெரிக்கர்கள் வெள்ளை நிறம் ஆனால் குறுகிய மனது. அடுத்தவர் நாட்டையே அடிமையாக்க நினைக்கும் பேராசை


Wednesday, 10 April 2013

அற வழியில் ஆசைப்பட்டு அடுத்த அடி தொடரு...

ஆசை வேண்டும் அது நிறைவேற வேண்டும்
ஆசை வேண்டும் அது நிறைவேற வழி தேட வேண்டும் .
ஆசை வேண்டும் அது பேராசையாக இருக்காமல் இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அடுத்தவர் பொருளை அபகரிக்காமல் இருக்கும் நிலை வேண்டும்
ஆசை வேண்டும் விரும்பிய பொருள்  தனக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காமல் இருக்க வேண்டும்
ஆசை வேண்டும் அது ஆண்டவன் அருளை நாடி இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அது நிராசையானால் மனம் தளரா உள்ள உறுதி வேண்டும்
ஆசை உண்டாக்கி ஏமாற்றும் மனம் பெறாத ஆசை வேண்டும்

ஆசைப் படுவது மனித இயல்பு .ஆசையற்றோர் முன்னேற்றம் அடைய வழியேது.
ஆசையற்றோர் நிலை தேக்கம் காணும் .ஆசை துன்பத்தை வரச் செய்யும் என்போர் வாழ்கையை விளங்கிக் கொள்ளாதவர். தனி மரம் தோப்பாகாது .தனித்து வாழ விரும்புவோர் தனித்து விடப்படுவார் . அது அவருக்கும் பயன்தராது அவரால் மற்றவரும் பயனடைய மாட்டார் .
ஆசைப்பட்டதால் சமுதாயம் வளர்ந்தது. ஆசை உள்ளத்தோடு இளவயதிலேயே தொடங்கியது. முதல் மனிதர் ஆதம் அவ்வா மேல் ஆசை கொள்ள வைத்தது இறைவனின் நாட்டம் . அது முதல் தொடங்கிய காதலின் ஆசை உலகம் இருக்கும் வரை நீடிக்கும் அதனால் சமுதாயம் பெருகும் .
மரணிப்பதை நேசிக்காதே ,கொள்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது,தற்கொலையை
நாடுவது பலவீனத்தின் அறிகுறி. கொள்கை மீது நம்பிக்கை அற்ற நிலை.
நம்பிக்கை இல்லாத கொள்கை விரயம். கொள்கை .உயர்வானதாக இருத்தல் அவசியம். நினைத்ததை முடிக்கும் வரை நம்பிக்கையை நிலை நிறுத்தி போராடு. அதற்கு வாழ்வை நாடு. .நினைப்பது நடந்தே தீரும் என்ற நம்பிக்கை வேண்டும் அது வரும்போது வரட்டும் .கொள்கை பிடிப்பும் அந்த கொள்கை உயர்ந்த கொள்கையாக மட்டும் இருப்பது மிகவும் அவசியம்

Friday, 5 April 2013

பொறுமையும் பொறாமையும்

பொறுமை அமைதியைத் தரும்
பொறாமை கவலையைக் கொடுக்கும்

பொறுமை எனும் மனத் தூய்மை என்றும் பெருமையே தரும்.
பொறாமை எனும் மனக் குழப்பம் மனோநிலையை பாதிக்கும்

பொறுமையாக செயல்பட தவறு வருவது குறையும்
பொறாமையாக செயல்பட இருப்பதையும் இழக்கும் நிலை வரலாம்

பொறுமையாக இருந்து  நினைத்தது நடக்க செயல்படுத்த வேண்டியதை குறித்த நேரத்தில் செயல்படுத்தாமல் போனால் நினைத்தது நடக்காமல் போய் விடும். பொறுமை தாமதமாக மாறிவிடக் கூடாது

பொறாமை நல்ல காரியங்களில் நாமும் ஈடுபட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வரலாம். பொறாமை அடுத்தவர் போல் நாமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் முன்னேற்றதிற்கு வழி வகுக்கும் .

பொறாமை அடுத்தவரின் முன்னேற்றத்தை ,அழகை கண்டு வேதனையாவது மனோ வியாதியாகிவிடும் .தனக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைத்து விட்டதே என்று ஏங்கும் நிலை அழிவையே தரும் . எங்கேயோ உள்ளவனை நினைத்து பொறாமை வருவதில்லை அருத்தவரை நினைத்து காழ்ப்புணர்ச்சியோடு வருவது பொறாமை .

பெண்களுக்கு பொறாமை உணர்வு மேலோங்கி நின்றாலும் நேரடியாக அது அவர்களை பாதிப்பதில்லை நேரடியாக அவர்கள் செயல்படுத்த முயலாததால். அதற்கு தூதுவராக பலிகடாவாக ஆண்கள் ஆக்கப்படுகிறார்கள்

பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. இறைவனது  அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது.

Tuesday, 2 April 2013

தாவுதலும் பெருமையாக சொல்லப்படும்!

நாணயமின்றி நம்பிக்கை ஏது ?
நாணயமும் நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கம்

நன்னம்பிக்கை நாணயத்தினரோடு
நம்பிக்கையற்ற தன்மை நாணயமற்றோடு

உண்மை ஒன்றிருக்க பொய் ஒன்றிருக்கத்தானே செய்யும்
கவிதை ஒன்றிருக்க பொய்யும் மெய்யும் கலக்கத்தானே செய்யும்

தவறு  ஒன்றிருக்க தண்டனை கிடைக்கத்தானே செய்யும்
தண்டனை குறைவாக இருக்க குற்றம் பெருகத்தானே செய்யும்

Sunday, 24 March 2013

'குழிப் பிள்ளை மடியில்'

'குழிப் பிள்ளை மடியில்'
அழகிய முதல் பேத்தி எனக்கும் இருந்தது. அது ... ஆறு மாதத்தில் மருத்துவ முறைகேடால் இறந்தது. நான் என்னை இழந்தேன், மனம் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்தேன்.எதைக் கண்டாலும் பயம் .ஒரு குழந்தை ஓரமாக நடந்து போனால் விழுந்து விடுமோ! என்ற பயம் இன்றும் உள்ளது .கற்பனை வியாதிகள் மனதில் ஊடுருவி வாழ்வையே வேதனையாக்கியது . ஒரு நண்பர் அழகாகச் சொல்லி ஆறுதல் தந்தார் 'குழிப் பிள்ளை மடியில்' என்று. அதுவே இறைவன் அருளால் நடந்தது .மனதிலும் தெளிவு வந்தது . இறைவன் செய்வது நன்மையாகவே அமையும். நம் வேலை இறைவனிடம் வேண்டுவது அவர்களுக்காக'துவா' செய்வது. 'ஒட்டகத்தை கட்டு இறைவனை வேண்டு' நபி மொழி .நாமும் கவனமாக இருக்க வேண்டும் இனி தவறு நடக்காமல் இருக்க.


One day Prophet Muhammad (peace be upon him) noticed a Bedouin leaving his camel without tying it and he asked the Bedouin, “Why don’t you tie down your camel?” The Bedouin answered, “I put my trust in Allah.” The Prophet then said, “Tie your camel first, then put your trust in Allah” (At-Tirmidhi).

Sometimes we can very easily forget that we have to do our bit in our endeavours as well; effort and struggle is required from us if we truly want to achieve or attain something…….. (A reminder for myself first and foremost)