ஒருவர் பயணம் போகும் பொழுது ..
அவரை வாழ்த்தி அனுப்புகின்றோம்
அவரிடம் பயணத்தில் உள்ள சிலருக்கு 'சலாம்' வாழ்த்துகள்
சொல்லச் சொல்கின்றோம்
அல்லது சில பொருட்களை மற்றவருக்கு கொடுக்கச் சொல்கின்றோம்
அவர்கள் சரி என்று உடன்படுகின்றார்கள்
இதில் ஒரு உயர்ந்த உண்மை ஒளிந்திருக்கின்றது
அவர் ஒப்புக் கொண்டு கொண்டுச் செல்வது அமானிதப் பொருள்
அந்த அமானித பொருளும் அல்லது அந்த அமானித வாழ்த்தும்
அவர்களது பயணத்திற்கு ஒரு பாதுகாப்பாக அமைந்து விடுகின்றது
பொறுப்புகளை முழுமையாக ஏற்று, அமானிதத்தை பொறுப்புணர்வோடு நிறைவேற்றும் மனிதர்களுக்கு இறைவன் பாதுகாப்பு தருகின்றான்
பயணம் செல்வதற்கு முன்
இறைவனிடம் பயண பாதுகாப்பு நாடி
இரண்டு ரகாயத் நபில் தொழுவதும் உயர்வானது .
Mohamed Ali- முஹம்மது அலி
------------------------------------------------------------------------
சேருமிடம் சேரும் வரை நமது தீர்மானங்கள் யாவும் ...
வெயிட்டிங் லிஸ்டில் தான் ....இப்படி சொன்னவர் ...
மஸ்கட் டூ சென்னை விமானத்தில் என் அருகிலிருந்த நர்ஸ் மிஸ்ஸியம்மா ...ஜெர்மனியிலிருந்து ஒமான் ஏர்வேஸில் வருகிறார்.
உண்மையும் அது தானே .....நண்பர்களே.
Iskandar Barak
Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts
Wednesday, 13 August 2014
Sunday, 29 December 2013
பயணத்தில் பார்வை
பயணம் இனிய முறையில் முடிந்தது
பயணத்தில் கண்டது மகிழ்வைத் தந்தது
பயணம் அறிவைத் தந்தது
நம் வீட்டில் ஒரு பூனை
ஏழை வீட்டில் நான்கு பூனைகள்
நம் தோட்டத்தில் ஒரு குளம்
ஏழையின் வீட்டின் அருகில் நீர் நிற்காத ஒரு சிற்றோடை
நம் தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் காட்டுகிறது
ஏழை வீட்டின் கொள்ளையில் நிலாவும் நட்சத்திரங்களும் ஒளி தருகின்றன
நம் தோட்டத்தின் பாதுகாப்புக்கு நாற்புறமும் சுவர்கள் மற்றும் காவலர்கள்
ஏழையின் வீட்டில் சேவை ஊழியர்கள்,காவலர்கள் இல்லை
ஏழையின் வீட்டிற்க்கு உறவினர்களும் நண்பர்களும் பாதுகாவலர்கள்
நம் வீட்டு தலைவாயிலில் வளைவாக செயற்கையாக அமைக்கப்பட்டது 'போர்டிகோ'
ஏழையின் வீட்டின் அடிவானத்தில் அழகுடன் காட்சி தரும் வானவில்
Thursday, 12 September 2013
நான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை
நான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை
நாளா பக்கமும் உன் பார்வை போனால்
நான்கு பேர்களால் நீ பேசப் படுவாய்
உனக்கென்ற மனம் உன்னிலிருக்க
உனக்கேற்ற மனம் உயர்வாயிருக்க
நோக்கமும் செயலும் உயர்வாயிருக்க
நேசமற்ற மக்கள் உனை புறம் பேசுவதேன் !
உலகம் மக்களுக்காக படைக்கப் பட்டிருக்க
உலக மக்களில் நீயும் ஒருவராய் படைக்கப் பட்டிருக்க
உனக்குள் இருக்கும் அறிவு உயர்வடைய
உனக்காக மட்டும் நீ வாழாமலிருக்க
உயர்ந்தோர் உரையைக் கேட்டு உன்னை உயர்த்திக் கொள்
Subscribe to:
Posts (Atom)




